மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு பாதியாக சரிந்தது

புதுடெல்லி: மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு கடந்த ஆண்ைட விட பாதியாக குறைந்துள்ளது. மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வதை மத்திய  அரசு ஊக்குவித்து வருகிறது. ஆனால், நடப்பு ஆண்டில் கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாதங்களில் பங்குச்சந்தையுடன் இணைந்த  மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் 55,700 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் முதலீடு 1.12  லட்சம் கோடியாக இருந்தது. என பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு வரியம் (செபி) தெரிவித்துள்ளது.

மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு துவக்கத்தில் வரவேற்பு மிகுந்ததாக இருந்தது. ஆனால், முதலீட்டுக்கு ஏற்ற பலன் இல்லாததால் சிறிய  முதலீட்டாளர்கள் இதில் ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக இந்த ஆண்டு முதலீடு சரிந்துள்ளது. இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 55,700  கோடியில் கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரை மட்டும் 43,500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற மாதங்களில் முதலீடு பெரும்பாலும்  ஈர்க்கப்படவில்லை என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related Stories: