×

மார்ச் மாதத்துக்குள் ஏர் இந்தியா விற்கப்படும்: நிர்மலா சீதாராமன் தகவல்

புதுடெல்லி: பொதுத்துறை நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்பனை மார்ச் மாதத்துக்குள் விற்க மத்திய  அரசு திட்டமிட்டுள்ளது என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஏர்-இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவன பங்குகளை  மட்டும் விற்பதன் மூலம் நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில், ஏர் இந்தியா  நிறுவனம் சுமார் 60,000 கோடிக்கு மேல் கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறது. கடந்த நிதியாண்டில் இந்த நிறுவனத்துக்கு இயக்க நஷ்டம் 4,600 கோடி.  கடந்த ஆண்டு பெரும்பகுதி பங்குகளை விற்பனை செய்யும் திட்டம் தோல்வியில் முடிந்தது. இதை தொடர்ந்து, அனைத்து பங்குகளையும் விற்க  மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுபோல் பாரத் பெட்ரோலியம் நிறுவன பங்குகளின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 1.02 லட்சம் கோடி. இதில் மத்திய அரசின் 53 சதவீத  பங்குகளை விற்பதன் மூலம் 65,000 கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேற்கண்ட இந்த நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பனை  செய்ய மத்திய அரசு முடிவு செய்தது தொடர்பான தகவல்கள் அவ்வப்போது வெளியாகின. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானும்  உறுதிப்படுத்தியிருந்தார். இதுதொடர்பாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஏர் இந்தியா மற்றும் பாரத்  பெட்ரோலியம் நிறுவன பங்குகள் விற்பனையை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் நடப்பு  நிதியாண்டில் 1 லட்சம் கோடிக்கு மேல் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. ஏர் இந்தியாவை வாங்க சர்வதேச முதலீட்டு நிறுவனங்கள் ஆர்வம்  காட்டியுள்ளன.

பொருளாதார மந்தநிலையில் இருந்து மீள மத்திய அரசு சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், பல தொழில் துறைகள்  மந்த நிலையில் இருந்து மீண்டு வருகின்றன. சமீபத்தில் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளால் அதிகரித்துள்ளதால், ஜிஎஸ்டி வசூல் மீண்டும்  அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்களிடையே தேவை அதிகரிப்பால், விழாக்காலங்களில் மட்டும் வங்கிகள் 1.8 லட்சம் கோடி  கடன் வழங்கியுள்ளன என்றார்.

Tags : y March, Air India, will be sold to: Nirmala Sitharaman, Info
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...