சுற்றுலா பஸ்சில் கியர் மாற்றி விளையாடிய கல்லூரி மாணவிகள்: டிரைவரின் லைசென்ஸ் 6 மாதத்திற்கு ரத்து

திருவனந்தபுரம்: வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதில், தனியார் பஸ் டிரைவர் பஸ்சை  ஓட்டும்போது அவரது அருகில் இருந்த 2 இளம் பெண்கள் பஸ் கியரை மாற்றுகின்றனர். பின்னணியில் தமிழ் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க அதன்  தாளத்திற்கு ஏற்ப இவர்கள் கியரை மாற்றுகின்றனர். இந்த வீடியோ கேரள மோட்டார் வாகனத்துறை அதிகாரிகளுக்கும் கிடைத்தது. இது தொடர்பாக  விசாரித்தபோது பஸ் டிரைவர் வயநாட்டை சேர்ந்த ஷாஜி என்றும் தனியார் சுற்றுலா பஸ் டிரைவர் என்றும் தெரிய வந்தது.

வயநாட்டை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவிகள் அந்த பஸ்சில் ேகாவாவிற்கு சுற்றுலா சென்றனர். அப்போதுதான் டிரைவருக்கு பதிலாக மாணவிகள்  கியரை மாற்றும் சம்பவம் நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து வயநாடு ஆர்டிஓ பிஜூவின் உத்தரவின்பேரில் டிரைவர் ஷாஜியை நேரில்  ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பினர். நேற்று ஷாஜி ஆஜரானார். தான் குற்றம் செய்ததை அவர் ஒப்புக்ெகாண்டார். இதையடுத்து 6 மாதத்திற்கு  அவரது லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது.

Related Stories: