×

மாதவரம் மண்டலத்தில் அச்சுறுத்தும் மின்கம்பங்கள்

புழல்: சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், புழல் காவாங்கரை, கண்ணப்ப சாமிநகர், கன்னடபாளையம், புனித அந்தோணியார் நகர், அண்ணா நினைவு நகர், கதிர்வேடு, எம்ஜிஆர் நகர், கலெக்டர் நகர், மகாலட்சுமி நகர், லட்சுமிபுரம் மற்றும் ரெட்டேரி, டீச்சர்ஸ் காலனி, கடப்பா சாலை, கல்பாளையம், விநாயகபுரம், புத்தாகரம், சூரப்பட்டு மற்றும் சண்முகபுரம் பகுதிகளில், மின்வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பல மின்கம்பம், தற்போது உடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.

சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக மின்கம்பம் மீது செடி, கொடிகள் வளர்ந்து படர்ந்துள்ளது. சில பகுதிகளில் விளக்கே தெரியாத அளவுக்கு செடிகள் மறைத்துள்ளது. இதனால் மின்கம்பம் அருகே நடந்து செல்லும் மக்களுக்கு ஷாக் அடிக்கும் நிலை உள்ளது.  இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். பெரிய அளவில்
அசம்பாவிதம் நடைபெறும் முன், மாதவரம் மண்டல அதிகாரிகள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Monthly, zoning threats , zone
× RELATED உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள்...