மதுரை மத்திய சிறையில் போலீசார் திடீர் ரெய்டு

மதுரை: மதுரை மத்திய சிறையில் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அதிகாலையில் நடந்த இந்த சோதனையால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை மத்திய சிறையில் கஞ்சா, செல்ேபான்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் கைதிகளிடம் பயன்பாட்டில் இருப்பதாக புகார்கள் வந்தன. இதனால் சிறையில் கைதிகளுக்குள் தகராறு, அடிதடி போன்ற சட்டம் - ஒழுங்கு  பிரச்னைகளும் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, போலீஸ் அதிகாரிகள் அவ்வப்போது திடீர் சோதனைகள் நடத்தி, கைதிகளின் அறைகளிலிருந்து கஞ்சா பொட்டலங்களையும், செல்போன், சிம்கார்டு, சார்ஜர் போன்ற அனுமதியில்லாத பொருட்களை  கண்டறிந்து  பறிமுதல் செய்து வருகின்றனர்.

 இந்நிலையில், நேற்று அதிகாலை 6 மணியளவில் திலகர்திடல் உதவி போலீஸ் கமிஷனர் வேணுகோபால் தலைமையில் மதுரை சிறையில் திடீர் சோதனை நடந்தது. எஸ்.எஸ் காலனி இன்ஸ்பெக்டர் அருணாசலம், மதுவிலக்கு பிரிவு  இன்ஸ்பெக்டர் கவுசல்யா மற்றும் 80 போலீசாரும், சிறைத்துறையினரும் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர். தண்டனை மற்றும் விசாரணை கைதிகளின் அறைகள், தனித்தனி செல்கள், கழிவறைகள், சமையல்கூடம் உள்ளிட்ட இடங்கள்  மற்றும் பெண்கள் சிறையிலும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடந்தது. இந்த சோதனையில் கஞ்சா, சிம்கார்டு செல்போன் எதுவும் சிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: