கொகைன் போதைக்கு ஈடானது வீடியோ கேம்: ஷாலினி, மனநல மருத்துவர்

பப்ஜி மாதிரியான கேம்கள் குழந்தைகளின் மனதை பெரிய அளவில் பாதிக்கின்றன. இது தொடர்பாக வெளிநாடுகளில் ஆராய்ச்சி செய்யும் போது, குழந்தைகளுக்கு வன்முறை நிறைந்த காட்சிகளை காட்டியுள்ளனர். ஒரு சிலருக்கு விளையாட்டு  களம் நிறைந்த காட்சிகளை போட்டுக்காட்டியுள்ளனர். அடுத்த அரைமணிநேரத்தில் அந்த குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தனர். அப்போது, வன்முறை நிறைந்த காட்சிகளை பார்த்த குழந்தைகளை தாங்களும் அந்த கேம்மில்  இருப்பது போன்று  செய்து பார்க்க நினைக்கின்றனர். தங்களது பொம்மை மேல், நண்பர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர் என்பது தெரிய வந்தது. இதன் மூலம் குழந்தைகளுக்கு வன்முறை நிறைந்த காட்சிகள் ஆபத்தானது என தெரிந்தது. அந்த வன்முறை கேம்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஆபத்து. சமுதாயத்துக்கு  ஆபத்து என்பதால் குழந்தைகளின் வன்முறை காட்சிகளை காட்டக் கூடாது என்பது தான் அந்த ஆராய்ச்சியின் முடிவாக உள்ளது.. குழந்தைகள் கேமை கேமாக  பார்க்கிற அளவுக்கு மனப்பக்குவம் இல்லை. எத்தனையோ இளைஞர்கள் கூட தங்களுக்கு பிடித்த நடிகரின் படத்ைத பார்த்து விட்டு அது தான் ரியல் என்று நினைப்பவர்கள் இருக்கத் தான் செய்கின்றனர். அவர்களுக்கு திரையில், கனவில்  வருவதை நிஜம் என்று நினைக்கின்றனர்.

இருப்பதில்லை. ெபற்றோர்கள் கோபப்படாமல் சாந்தமாக இந்த பிரச்னையின் வீரியத்தை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். வன்முறை காட்சியை காட்டா விட்டால் அந்த குழந்தை நல்ல படியாக வளரும் என்ற நம்பிக்கை வேண்டும். வன்முறை காட்சிகள்  பார்க்காதே என்று சொல்லும் போது அந்த குழந்தைகளுக்கு கோபம் வரும். அவர்கள் தற்ெகாலைக்கு முயல்வார்கள். இதில், ஒரு ஆபத்து உள்ளது என்பதை உணர்ந்து அந்த குழந்தைகளுக்கு மன நல சிகிச்சை அளித்து விட்டு அவர்களிடம் கூற  வேண்டும். இப்படி சொல்லும் போது பார்வையினால் பார்த்த விஷயத்துக்கு சிகிச்சை தேவையா என்று நினைக்கின்றனர்.

 குழந்தைகள் கஞ்சா, கொகைன்  பயன்படுத்தக்கூடாது என்று எப்படி சொல்கிறோமோ அதே போன்று கொடூரமான கேம்களை பார்க்க விடாமல் பார்த்து கொள்ள வேண்டும். டிக்டாக்கும் இதே அளவுக்கு போதையாகத்தான் பார்க்கிறோம். இதை  நிறைய பேர் பார்ப்பதும், நிறைய பேர் லைக் செய்வதும் போதையாக இருப்பதால் பப்ஜிக்கு சொன்ன அதே விதி பொருந்தும். கண் மூலமாக பார்ப்பதால் கடைசியில் மூளை வரை சென்று சில ரசாயணத்தை உற்பத்தி செய்வதால் அந்த ரசாயணம்  போதையை தூண்டுகிறது.

டிக்டாக் நடக்கிற வார்த்தை யுத்தத்தை தெருமுனையில் எல்ேலார் முன் வைத்து கேள்விக்கேட்டு விட்டான் என்று நினைக்கின்றனர். அவனை கேள்வி கேட்காவிடில் எனது மரியாதையை இழந்து விடுவேன். என்னுடைய சப்போர்ட் என்னை விட்டு போய் விடும். முன்னர் தெரு முனையில், வீட்டு  முற்றத்தில் இது போன்ற தகராறு நடக்கும். இப்போது போன் மூலமாக அதே சைக்காலஜி தூண்டப்படுவதை பார்க்கிறோம். கடைசியில் இது மான பிரச்னை என்று பார்த்து தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதை பார்க்கிறோம்.  இந்த  மாதிரியான டிக்டாக்கிற்கு அடிமையாவதற்கு வயது வரம்பு இருக்கிறதா என்று நாங்கள் பார்க்கவில்லை. 6 மாத குழந்தை முதல் வயதான தாத்தா, பாட்டி வரை அடிமையாவதை பார்க்கிறோம்.

நிறைய தாத்தா, பாட்டிக்கள் ஒரே சீரியலை  நான்கைந்து முறை பார்க்கின்றனர். அவர்கள் அதை பார்க்காவிட்டால் தலைவலி, உடம்பு வலி, மன உளைச்சல் என்று கூறுகின்றனர். ஒரு விஷயத்துக்கு அடிமையாவதற்கு வயதே இல்லை. ஆனால், கண்ணால் எவ்வளவு பார்க்கிறார்கள்  என்பதை வைத்து தான் அவர்கள் அடிமையாகின்றனரா என்பது தெரியும்.ெபற்றோர்கள் கோபப்படாமல் சாந்தமாக இந்த பிரச்னையின் வீரியத்தை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். வன்முறை காட்சியை காட்டா விட்டால் அந்த குழந்தை நல்லபடியாக வளரும் என்ற நம்பிக்கை வேண்டும்.

Related Stories: