×

ஜப்பான் பாதுகாப்பு துறை அமைச்சருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு: இருநாடுகளின் உறவை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை

பாங்காக்: தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசியான் மாநாட்டில் பங்கேற்ற இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கு ஜப்பான் பாதுகாப்பு துறை அமைச்சரை சந்தித்து பேசினார். தென்கிழக்காசிய நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாநாடு தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பங்கேற்க இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தாய்லாந்து புறப்பட்டுச் சென்றார்.

அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்றுள்ள இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சர் தாரோ கோனோவைச் சந்தித்தார். அப்போது; அப்போது பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளிடையே உள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் பேச்சு நடத்தியதாகக் கூறப்படுகிறது.


Tags : Rajnath Singh ,Defense Minister ,Japanese , Rajnath Singh, Minister of Defense of Japan meets:
× RELATED தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது: ராஜ்நாத் சிங்