விராட் கோலி தலைமையில் இந்திய அணிக்கு 10வது இன்னிங்ஸ் வெற்றி: இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஒரே வரியில் பாராட்டு

நாக்பூர்: டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி தனது தலைமையில் இந்திய அணிக்கு 10வது இன்னிங்ஸ் வெற்றியை வங்கதேசத்துக்கு எதிரான வெற்றி மூலம் பெற்றுத் தந்ததையடுத்து கேப்டன் விராட் கோலியை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் ஒருவரியில் புகழ்ந்து தள்ளியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு துல்லியத் தாக்குதலில் 3-0 ஒயிட்வாஷ் கொடுத்த விராட் கோலி தலைமை இந்திய அணி பலவீனமான வங்கதேசத்தை இந்தூரில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் கோலி தொடர்ச்சியகா 6 டெஸ்ட்களில் வென்றுள்ளார், 2013-ல் தோனி இதே போல் 6 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றுள்ளார். விராட் கோலி தற்போது 52 டெஸ்ட் போட்டிகளில் 32 வெற்றிகளுடன் நமப்ர் 1 ஆகத் திகழ்கிறார். இதனையடுத்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஒன்லைனர் புகழாரம் சூட்டியுள்ளார்.

தன் ட்விட்டர் பக்கத்தில் அவர், “வெகுவேகமாக இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டனாகி வருகிறார் விராட் கோலி” என்று மிகப்பெரிய புகழாரம் ஒன்றைச் சூட்டியுள்ளார். பொதுவாக ஒப்பீடு என்பது ஒரு சூக்கும நிலையாகும், பருமையான நிலையல்ல, அந்தந்த காலக்கட்டம், பிட்ச், எதிரணியின் பலம் ஆகியவை உள்ளன, கேப்டன்சி என்பது வெறும் எண்ணிக்கை அல்ல என்பதே நுட்பமான ரசிகர்களின் நிலைப்பாடாக இருக்க முடியும்.

Related Stories: