×

கொடைக்கானலில் குளிர் சீசனை அனுபவிக்க குவிந்த சுற்றுலாப்பயணிகள்

கொடைக்கானல்: கொடைக்கானலில் குளிர் சீசனை அனுபவிக்கவும், வார விடுமுறையை கொண்டாடவும் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர். ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது ‘ஆப் சீசன்’ முடிந்த நிலையில், நவம்பர், டிசம்பர் மாதங்களில் நிலவும் குளிர் சீசன் துவங்கியுள்ளது. இந்த சீசனில் கொடைக்கானலில் நிலவும் தட்பவெப்ப நிலை குறைந்து குளிராகவே இருக்கும். இதனை அனுபவிக்கும்விதமாக சுற்றுலாப்பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். நேற்று வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.

மோயர் பாயிண்ட், குணா குகை, பைன் பாரஸ்ட், க்ரீன் வேலி வியூ எனப்படும் தற்கொலை முனை, தூண் பாறை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப்பயணிகளின் தலைகளாகவே தெரிந்தது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, கரடிச்சோலை, பியர் சோழா நீர்வீழ்ச்சிகளில் பரவலாக தண்ணீர் கொட்டுகிறது. இங்கும் சுற்றுலாப்பயணிகள் குவிந்து இயற்கையழகை கண்டு ரசித்தனர்.

Tags : season ,Kodaikanal ,Focus tourists , Kodaikanal, cold season, tourists
× RELATED 17வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை மறுநாள்...