உலகப் பணக்காரர்கள் பட்டியல்: மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடம்...பெசோஸ்-க்கு 2-ம் இடம்

வாஷிங்டன்: உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ் மீண்டும் முதல் இடத்தை பிடித்தார். 25 ஆண்டுகளுக்கு முன்பு அமேசான் தொடங்கப்பட்டு இன்று பெரும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.  ப்ளூம்பர்க் கோடீஸ்வரர் பட்டியலில் 54 வயதாகும் அமேசான் நிறுவனரான பெசோஸ், உலகின் 2-ம் பெரும் பணக்காரர் ஆவார். கடந்த ஆண்டு முதல் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் சிஇஒ ஜெஃப் பெசோஸ்  முதலிடத்தில் இருந்து வந்தார்.

இந்நிலையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு உயர்ந்ததால் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடத்திற்கு சென்றார். அமேசான் நிறுவனத்தின் சிஇஒ பெசோஸ் தனது மனைவியை விவாகரத்து செய்ததால், தனது சொத்துகளில்  கணிசமான பகுதியை அவருக்கு ஜீவனாம்சமாக வழங்கினார். இதன் காரணமாகவும் அவரது சொத்து மதிப்பு குறைந்து உலக பணக்காரர்கள் பட்டியலில் 2ஆவது இடத்திற்கு இறங்க நேர்ந்தது.

ஐம்பத்து நான்கு வயதான ஜெஃப் பெசோஸ் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்திருப்பது முதல் முறை அல்ல. 2017-ம் ஆண்டு ஜூலை மாதத்தில், அமேசானின் பங்குகளின் மதிப்பு பங்குச் சந்தையில் ஏறிய போது, ஒரு குறுகிய  காலத்திற்கு பில் கேட்ஸை கடந்து சென்று, முதலிடத்தில் இருந்தார். பிறகு பங்குகளின் மதிப்பு வீழ்ந்த போது இரண்டாம் இடத்திற்கு வந்தார். கடந்த ஏப்ரல் மாதத்தில், அமேசானின் பங்குகளின் மதிப்பு திடீரென கூடிய போது, ஒரு நாளிலேயே  பனிரண்டு பில்லியன்களை தன் கணக்கில் சேர்த்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: