தொழிற்சாலை ரசாயன வாயுவால் சுற்றுச்சூழல் பாதிப்பு கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருவொற்றியூர்: மணலியில் மத்திய அரசுக்கு சொந்தமான தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவு மற்றும் வாயுக்களால் மணலி சுற்றியுள்ள சின்னசேக்காடு, பெரியதோப்பு, எம்ஜிஆர் நகர், ஆமூல்லைவாயல், அரியலூர், கடப்பாக்கம்  போன்ற பலபகுதிகளில் காற்று மாசடைந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் நுரையீரல் பாதிப்பு, ஆஸ்துமா போன்ற பிரச்னைகளால் அவதியுற்று வருகின்றனர். இதுகுறித்து பல முறை சம்மந்தப்பட்டத்துறைக்கு பொதுமக்கள் புகார் அளித்தும், இதை தடுக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் காற்று, நீர் மாசுக்களை கண்டறியும் குழுவினை மணலிக்கு அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும். மருத்துவ முகாம்கள் அமைத்து நோயின் தாக்கம் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர். மணலி மார்க்கெட் பகுதியில் நேற்று முகமூடி அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: