டிரான்ஸ்பரை கண்டித்து நூதன போராட்டம் 65 கி.மீ தூரம் ஓடிய போலீஸ் எஸ்.ஐ.

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் பித்தோலி காவல் நிலையத்தில் எஸ்ஐ.யாக பணியாற்றி வருபவர் விஜய் பிரதாப்.  இவருக்கு உயரதிகாரிகள் திடீரென இந்த ஸ்டேஷனில் இருந்து பணியிட மாற்றம் செய்துள்ளனர். ஆனால், இதற்கு விஜய் பிரதாப் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் டிரான்ஸ்பரை கண்டித்து போராட்டம் நடத்த விஜய் பிரதாப் முடிவு செய்தார். மேலும், அதை நூதன வகையில் செய்து பொதுமக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்ப அவர் முடிவு செய்தார். இதற்காக, 65 கிலோ மீட்டர் தூரம் வரை விஜய் பிரதாப் ஓடினார். அதிகாரிகள் தன்னுடைய கோரிக்கையை ஏற்காமல் சர்வாதிகாரப் போக்கில் செயல்படுவதாக விஜய் பிரதாப் குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து 65 கி.மீ. தூரத்துக்கு ஓடியதால், விஜய் பிரதாப் திடீரென வழியில் மயக்கம் அடைந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Related Stories:

>