மத்திய, மாநில அரசுகளின் சேவைகளை வழங்குவதில்சத்தமின்றி சாதனை படைக்கும் 2.5 லட்சம் பொது சேவை மையங்கள்

வாலாஜா: மத்திய, மாநில அரசுகளின் சேவைகளை வழங்குவதில் தமிழகத்தில் 2.5 லட்சம் பொது சேவை மையங்கள் சத்தமின்றி சாதனை படைத்து வருகின்றன.நாடு விடுதலை அடைந்து 72 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்களை எடுத்து செல்வதில் பல முயற்சிகள் செய்தும் அதில் நாம் வெற்றி பெற  முடியவில்லை. ஆனால் கடந்த 2015ம் ஆண்டு மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்ட பொது சேவை மையங்கள் கிட்டத்தட்ட 2.5 கிராமங்களையும் சென்றடைந்து விட்டது. அந்த பொது சேவை மையங்களும் மினி அரசாங்கங்களாகவே செயல்பட்டு  வருகின்றன. நாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் டிஜிட்டல் தொழில் நுட்பம் முக்கிய பங்கு அளிக்கிறது.

அதோடு பொது சேவை மையங்களை தொடங்கியதன் மூலம் லட்சக்கணக்கானோர் சுயவேலைவாய்ப்பையும் பெற்றதுடன், தங்களை சார்ந்த குறைந்தது 2 பேருக்கு ேவலைவாய்ப்பையும் வழங்கும் நிலை இதன் மூலம் ஏற்பட்டது. இந்தியாவில்  700 மாவட்டங்களில் 1220 ஒருங்கிணைப்பாளர்கள் இந்த மையங்களை கண்காணிக்கிறார்கள். இந்த மையம் நடத்துபவர்கள் கம்ப்யூட்டர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் திறன் பெற்றவர்களாக உள்ளனர். அரசின் சேவை, வங்கி சேவை,  பென்ஷன் திட்டங்கள், விவசாயிகளுக்கு பென்ஷன் மற்றும் பயிர் இன்சூரன்ஸ் போன்ற திட்டங்களின் பலன்களை இங்கு பெற முடியும்.  டாலர் பரிவர்த்தனை, டிக்கெட் புக்கிங், தேசிய பென்ஷன் திட்டம், டிஜிட்டல் கிராமம், அனைத்து வங்கி பரிவர்த்தனை, ஆன்லைன் ஷாப்பிங், இன்சூரன்ஸ், டெலி மெடிசன்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, விமானம், ரயில் மற்றும் பஸ்  பயணச்சீட்டு முன்பதிவு, ஸ்ேபாக்கன் இங்கிலிஷ், திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்ட கம்ப்யூட்டரில் அனைத்து பாடங்கள், வருமானவரி , ஜிஎஸ்டி ஆன்லைன் மூலமாக சமர்ப்பித்தல். டிஜிட்டல் கிராமம் உருவாக்குதல் ஆகிய பணிகளும்  இம்மையங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல் மாநில அரசின் அனைத்து திட்டங்களுக்கான சேவைகளும் இம்மையங்கள் மூலம் வழங்கப்படுகிறது.

அனைத்து கிராமப்புற மாணவர்களுக்கும் டிஜிட்டல் அறிவை ஏற்படுத்துகின்ற டிஜிட்டல் வகுப்பு இலவசமாக வழங்கபடுகிறது. சுங்க சாவடிகளில் வாகனங்கள் விரைந்து செல்வதற்கான பாஸ்ட் டேக் கட்டணத்தை பொது சேவை மையங்களில்  செலுத்த முடியும். இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை அறிவதற்காக 7வது பொருளாதார கணக்கெடுப்பு விரைவில் நடைபெற உள்ளது. இந்த மாபெரும் கணக்கெடுப்பு பணியை டிஜிட்டல் முறையில் செய்வதற்கு பொது  சேவை மையத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இம்மையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு நன்கு பயிற்சி பெற்ற 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்கெடுப்பாளர்கள் இதற்காக தயார் நிலையில் உள்ளனர். இன்னும் சில நாட்களில் தங்க பத்திர விற்பனை, பத்திர பதிவு செய்வதற்கான  இ-ஸ்டேம்பிங் வசதி ஆகிய சேவைகளை வழங்கும் உரிமையும் பொது சேவை மையத்திற்கு வழங்கப்பட உள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் தற்போதைய முதன்மையான முன்னணி வங்கியான எச்டிஎப்சி தன்னுடைய வங்கி பரிவர்த்தனையை பொது சேவை மையம் மூலமாக வழங்க மத்திய அரசுடன் அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்  செய்துள்ளது. இதன் மூலம் 5,130 கிளைகள் கொண்ட எச்டிஎப்சி வங்கி 2 லட்சத்து 50 ஆயிரம் சேவை மையங்களில் தன்னுடைய வங்கி சேவையை பிராமண்டமாக விரிவுபடுத்தியுள்ளது. இவ்வாறு மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற பிரதிநிதிகளாக செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிப்பணிகளிலும், மத்திய, மாநில அரசுகளுக்கும், மக்களுக்கும் இடையே பாலமாகவும் பொது சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

மக்கள் கடும் அவதி:

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் தங்கள் அரசின் சேவைகளை பொது சேவை மையங்களின் மூலமாக வழங்கி வருகின்றன. ஆனால் தமிழ்நாடு மட்டும் விதிவிலக்காக இ-சேவை மையங்கள் நடத்தி வருகின்றனர், இங்கு  போதுமான ஆட்கள் இல்லை. அப்படியும் இருப்பவர்கள் தொழில்நுட்ப அறிவும் அர்ப்பணிப்பு உணர்வும் இல்லாததால் மக்கள் அவதிப்படுகிறார்கள். ஆகவே தமிழ்நாடு அரசின் அனைத்து சேவைகளும் பொது சேவை மையத்திற்கு வழங்க வேண்டும் என வாலாஜாவில் பொது சேவை மையம் நடத்தி வரும் கணேசன் தெரிவித்தார்.

Related Stories:

>