மொபைலில் பேசிக்கொண்டு பஸ் இயக்கம்: ‘எம்டிசி’யில் மீண்டும் அதிகரிப்பு?: தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சென்னை: மொபைலில் பேசிக்கொண்டு பஸ்களை இயக்குவது எம்டிசியில் மீண்டும் அதிகரித்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.  சென்னை மாநகரப்போக்குவரத்துக்கழகம் (எம்டிசி) சார்பில் பல்வேறு வழித்தடங்களில் ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களை இயக்கும் ஓட்டுனர்கள் பலர் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு  உள்ளது. குறிப்பாக சிவப்பு விளக்கும் இருக்கும் போது பஸ்களை இயக்குவது.  பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களை பாதியிலேயே இறக்கிவிடுவது. பயணிகளை பஸ் ஸ்டாப்பில் சரியான இடத்தில் நிறுத்தி இறக்கிவிடாமல், சிறிது தூரம் கொண்டு சென்று விடுவது, பல நிறுத்தங்களில் நிற்காமல் செல்வது போன்ற  செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

சமீபகாலமாக பயணிகள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் நடக்கிறது. இதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. அதன் ஒருபகுதியாக மொபைல் போனில் பேசிக்கொண்டு பஸ்களை இயக்கி வருகின்றனர். இதற்காக மட்டும் கடந்த 2014-18ம் ஆண்டு வரையில் 300க்கும் மேற்பட்ட டிரைவர்கள் மீது  நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் இதுபோல் மொபைலில் பேசிக்கொண்டு பஸ்களை ஓட்டுவது அதிகரித்துள்ளது. இதனால் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பலரும் நிர்வாகத்திற்கு புகார் அளித்து வருகின்றனர். எனவே இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ேகாரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: