தமிழகத்தில் உள்ள 37 வளர்ப்பு யானைகள் பராமரிப்பு நிலை என்ன?: உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:  சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த ஆண்டனி கிளமென்ட் ரூபன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி,  மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 37 வளர்ப்பு யானைகள் உள்ளன என்று தமிழக வனத்துறை  தெரிவித்துள்ளது. இந்த யானைகள் பராமரிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய கடந்த 2016ம்  ஆண்டு குழு அமைக்கப்பட்டது. ஆனால், இந்த யானைகள் உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை என்று தெரியவருகிறது. எனவே வளர்ப்பு யானைகளின் தற்போதைய நிலையைக் கண்டறிய ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபுணர்கள்  குழுவை  அமைக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.  இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி சாஹி, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், யானைகள் பராமரிப்பு தொடர்பான வழக்குகள் வேறு அமர்வில் விசாரணையில்  உள்ளது. எனவே, நிலுவையில் உள்ள அந்த வழக்குகளுடன் இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க இந்த வழக்கை சம்மந்தப்பட்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிடுகிறோம் என்றனர்.

Related Stories: