முகிலன் ஜாமீனில் விடுவிப்பு

திருச்சி : தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடந்த போராட்டத்தின்போது துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து சென்னையில் சமூக ஆர்வலர் முகிலன் பேட்டியளித்தார். அதன்பின் மாயமான அவர், 145 நாட்களுக்கு பின் திருப்பதியில் மீட்கப்பட்டார்.

அப்போது கரூர் பெண் கொடுத்த பாலியல் பலாத்கார புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.  கடந்த  2 நாட்களுக்கு முன் அவருக்கு ஐகோர்ட் மதுரை கிளை ஜாமீன் வழங்கியது. இதை தொடர்ந்து நேற்று திருச்சி மத்திய சிறையிலிருந்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அப்போது முகிலன் கூறுகையில், அநீதிக்கு எதிரான போராட்டம் தொடரும். உண்மையை பேசும் போராளிகளுக்கு அழிவுதான் ஏற்படுகிறது என்றார்.

Related Stories: