×

அமைச்சர் சம்பத்தை புறக்கணிக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்

கடலூர்: கடலூர் டவுன்ஹாலில் கூட்டுறவுத்துறை சார்பில் நடைபெற்ற 66வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 835 நபர்களுக்கு 6.38 கோடி மதிப்பீட்டில்  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் கலந்துகொள்ளாமல் அதிமுக எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர். கலெக்டர் அன்புச்செல்வன் தலைமை தாங்கினார். நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் சம்பத் பேசினார்.

மாவட்ட அளவில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் அதிமுக  எம்எல்ஏக்கள் யாரும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். ஏற்கனவே அமைச்சர் சம்பத் மீதான அதிருப்தி காரணமாக அரசு விழாக்களில் பங்கேற்காமல் இருந்த எம்எல்ஏக்கள், மூன்றாக மாவட்டம் பிரிக்கப்பட்ட நிலையிலும் கலந்து கொள்ளவில்லை. இதனால் அமைச்சர் சம்பத் மீதான அதிருப்தி தொடர்ந்து நீடிப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : AIADMK ,incident ,AIADMK MLAs , AIADMK MLAs ignoring ,ministerial incident
× RELATED புதுச்சேரி சட்டமன்ற வாயிலில்...