×

உள்ளாட்சி தேர்தல் அதிமுகவில் 2 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் சுமார் இரண்டு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும், அதிமுக விருப்ப மனு விநியோகம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து நவம்பர் 15 மற்றும் 16ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் அதிமுக சார்பில் சுமார் இரண்டு லட்சம் பேர் போட்டியிட விண்ணப்பித்துள்ளதாக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, சென்னையில் மேயர் வேட்பாளராக அதிமுக சார்பில் போட்டியிட அமைச்சர் ஜெயக்குமார் மகனும் முன்னாள் எம்பியுமான ஜெயவர்தன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் பாலகங்கா, ராஜேஷ், வெங்கடேஷ்பாபு, நூர்ஜகான் உள்ளிட்டோர் விருப்ப மனு விண்ணப்பித்துள்ளனர் என்றார்.

Tags : election ,elections , 2 lakh candidates, apply for the local election
× RELATED வேட்பாளர்களின் குற்றப்பின்னணி...