பெட்ரோல் விலை திடீர் உயர்வு ஈரானில் வெடித்தது போராட்டம்

டெஹ்ரான்: ஈரான் நாட்டில் திடீரென 300 சதவீதம் அளவுக்கு பெட்ரோல் விலையை அந்நாட்டு அரசு உயர்த்தி உள்ளது. இதை கண்டித்து, நாடு முழுவதும்  மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரான் தொடர்ந்து அமெரிக்காவுடன் உரசல் போக்கில் உள்ளது. அமெரிக்காவுடன் கடந்த ஆண்டில் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் செய்துக் கொண்டது. ஆனால், ஈரான் தொடர்ந்து ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டி, அந்த  ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. இதனால் அமெரிக்கா பல்வேறு அணுசக்தி திட்டங்களில் ஈடுபட ஆரம்பித்தது. யூரேனியம் செறிவூட்டல் பணியை 10 மடங்கு வரை அதிகரித்தது. ஈரானின் நடவடிக்கைகளால் ஏற்கனவே  பல்வேறு பொருளாதார தடைகளை விதித்திருந்த அமெரி–்க்கா, அதன் நடவடிக்கைகளால் இந்த தடைகளை மேலும் உயர்த்தியது. இதனால் ஈரானால் கச்சா எண்ணெய்யை, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விற்க முடியவில்லை. இதனால்  கடும் பொருளாதார நெருக்கடியில் அந்நாடு சிக்கி உள்ளது.

இந்நிலையில்,  ஈரானில் பொருளாதாரத்தை சீர் செய்ய அந்நாட்டு அரசு பெட்ரோல் விலையை 300 சதவீதம் உயர்த்தியது. இது பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுதவிர மானிய முறையிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை  அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி, ஒரு காருக்கு மாதம் 60 லிட்டர் பெட்ரோல் மட்டுமே மானிய விலையில் கிடைக்கும். இதற்கே 50 சதவீதமும், அதற்கு மேல் 300 சதவீதமும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அரசின் இந்த சிக்கன நடவடிக்கைகளால் மக்கள் அதிருப்தி அடைந்து போராட்டங்களில் இறங்கி உள்ளனர். தலைநகர் தெஹ்ரான், சிர்ஜான் உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் போராட்டங்கள் நடந்து வருகிறது.

Related Stories:

>