ஏற்றுமதி- இறக்குமதி சரிவு வர்த்தகப் பற்றாக்குறை ரூ.79 ஆயிரம் கோடி குறைந்தது

புதுடெல்லி:  நாட்டின் ஏற்றுமதி கடந்த அக்டோபர் மாதத்தில் 1.11 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது 26 பில்லியன் டாலரராக (ரூ.1.86 லட்சம் கோடியாக) சரிந்துள்ளது. அதேபோல், இறக்குமதியும் 16.31 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது இறக்குமதி 37.39 பில்லியன் டாலராக (ரூ.2.68 லட்சம் கோடியாக) குறைந்துள்ளது. இதனால், வர்த்தகப் பற்றாக்குறை 11 பில்லியன் டாலர் அளவுக்கு (ரூ.79ஆயிரம் கோடி)  குறைந்துள்ளது. மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அக்டோபர் மாதத்தில் தங்கம் இறக்குமதி சுமார் 5 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 1.84 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

கடந்த 2018ம் நிதியாண்டின் அக்டோபர் மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 18 பில்லியன் டாலராக (ரூ.1.29 லட்சம் கோடியாக) இருந்தது. முக்கியமான 30 துறைகளில் 18 துறைகளில் உற்பத்தி குறைந்து அக்டோபரில் ஏற்றுமதி சரிவை சந்தித்துள்ளது. அக்டோபர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மேற்கண்ட விவரரம் தெரியவந்துள்ளது. பெட்ரோலியப் பொருட்கள், கார்பெட், தோல் பொருட்கள், அரசி மற்றும் தேயிலை ஆகியவை இறக்குமதி முறையே 14.6 சதவீதம், 17%, 7.6%, 29.5%, மற்றும் 6.16 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில், பொருளாதார வளர்ச்சி என்பது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவாக 5 சதவீதத்திற்கு குறைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நாட்டின் ஏற்றுமதி முறையே 6 சதவீதம்  மற்றும் 6.57 சதவீதம் குறைந்தது. கடந்த  ஏப்ரல் முதல் அக்டோபர் வரையில் ஏற்றுமதி 2.21 சதவீதம் குறைந்து 185.95 பில்லியன் டாலராக இருந்தது. அதேபோல், இற்குமதியும் 8.37 சதவீதம் குறைந்து 280.67 பில்லியன் டாராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: