×

சில்லி பாயின்ட்...

அதிக இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்த இந்திய அணி கேப்டன்கள் வரிசையில்  கோஹ்லி (10 வெற்றி) முதலிடத்துக்கு முன்னேறினார். டோனி (9), அசாருதீன்  (8), கங்குலி (7) அடுத்த இடங்களில் உள்ளனர்.
சையது முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரில், திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறும் பி பிரிவு லீக் ஆட்டத்தில் தமிழகம் - விதர்பா அணிகள் மோதுகின்றன. இப்போட்டி காலை 9.30க்கு தொடங்குகிறது.
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரில் இந்தியா ஹாட்ரிக் வெற்றியுடன் 3-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், 4வது போட்டி கயானா புராவிடன்ஸ் மைதானத்தில்  இன்று இரவு 11.00 மணிக்கு தொடங்குகிறது.

பாகிஸ்தான் - ஆஸி. லெவன் அணிகள் மோதிய 2 நாள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது. பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 386 ரன் குவித்து டிக்ளேர் செய்த நிலையில், ஆஸி. லெவன் 7 விக்கெட் இழப்புக்கு 246 ரன் எடுத்தது (79.5 ஓவர்).
இங்கிலாந்து அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து ஏ அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 302 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. 2ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 355 ரன் எடுத்துள்ளது (டென்லி  68, போப் 88, பட்லர் 88*, ஆர்ச்சர் 17*). இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

ஏடிபி உலக டூர் பைனல்ஸ் தொடரின் அரை இறுதியில் ரோஜர் பெடரர் - ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், அலெக்சாண்டர் ஸ்வெரவ் - டொமினிக் தீம் மோதுகின்றனர். அகாசி பிரிவில் நடால், ஸ்வெரவ், சிட்சிபாஸ் தலா 2 வெற்றி, 1 தோல்வி  பெற்றதால் செட் மற்றும் கேம்களின் அடிப்படையில் நடால் வெளியேற்றப்பட்டார்.
பகல்/இரவு டெஸ்ட் போட்டிக்கு பயிற்சி பெறும் வகையில் இந்திய அணி வீரர்கள் இந்தூர் ஹோல்கர் ஸ்டேடியத்திலேயே வலைப்பயிற்சி மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 ஹாங்காங் ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் இந்திய வீரர் கிடாம்பி காந்த் 9-21, 23-25 என்ற நேர் செட்களில் உள்ளூர் வீரர் லீ சியுக் யியுவிடம் போராடித் தோற்றார்.

அமைச்சருக்கு வீராங்கனைகளின் பரிசு!

டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டித் தொடரின் மகளிர் ஹாக்கியில் பங்கேற்க இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. இதையொட்டி மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவை நேற்று சந்தித்த  கேப்டன் ராணி ராம்பால், அந்த தொடரில் விளையாட உள்ள இந்திய வீராங்கனைகள் அனைவரும் ஆட்டோகிராப் போட்ட ஹாக்கி மட்டையை பரிசளித்து வாழ்த்து பெற்றார். இந்த தகவல் மற்றும் புகைப்படத்தை, அமைச்சர் ரிஜிஜு தனது  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரேசிலை வீழ்த்தியது அர்ஜென்டினா

சவுதி அரேபியாவில் பிரேசில்-அர்ஜென்டினா அணிகள் மோதிய நட்பு ரீதியிலான சர்வதேச கால்பந்து போட்டி நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது.  அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸி 13வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பில் அபாரமாக கோல் போட்டார். கோப்பையுடன் மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா வீரர்கள் உற்சாகமாக போஸ் கொடுக்கின்றனர்.Tags : Chili Point ...
× RELATED சில்லி பாயின்ட்...