×

3 நாட்களில் முடிவுக்கு வந்த இந்தூர் டெஸ்ட்... இந்திய அணி அபார வெற்றி! :இந்திய அணி பந்து வீச்சில் சுருண்டது வங்கதேசம்

இந்தூர்: இந்தூரில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ், 130 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு சுருண்ட வங்கதேசம், இரண்டாவது இன்னிங்சில் 213 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என  முன்னிலை வகிக்கிறது.

*இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், டாசில் வென்று பேட் செய்த வங்கதேசம் முதல் இன்னிங்சில் 150 ரன்னுக்கு சுருண்டது.

*முஷ்பிகுர் ரகிம் அதிகபட்சமாக 43 ரன் எடுத்தார். கேப்டன் மோமினுல் ஹக் 37, லிட்டன் தாஸ் 21 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். இந்திய பந்துவீச்சில் முகமது ஷமி 3, இஷாந்த், உமேஷ், அஷ்வின் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

*இதைத் தொடர்ந்து. முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன் எடுத்திருந்தது. ரோகித் 6 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், மயாங்க் அகர்வால் 37 ரன் மற்றும் செதேஷ்வர் புஜாரா 43 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.போட்டியின் இரண்டாம் நாளான நேற்றின் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் இன்று 3-ம் நாள் ஆட்டம் துவங்குவதற்கு முன்பாகவே, இந்திய அணி தனது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

*இதையடுத்து 343 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய வங்கதேச அணி வீரர்கள், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர்.

*இதனிடையே, 2வது இன்னிங்சில் வங்கதேசம் தரப்பில் அதிகபட்சமாக முஸ்பிகுர் மெஹிதி ஹாசன் -38, லிட்டன் தாஸ் ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். இந்திய தரப்பில் ஷமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின் 3, உமேஷ் யாதவ் 2  இஷாந்த் சர்மா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 


Tags : Bangladesh ,Indore Test ,bowling ,India , Bangladesh, Indian team, win, Test, match, win
× RELATED சில்லி பாயின்ட்…