×

பழிவாங்கியே தீருவோம் என மனைவி சபதம் மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் ஆதரவாளர்கள் கண்காணிப்பு

சேலம்: மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் மனைவி பழிவாங்கியே தீருவோம் என கூறியுள்ளதால், ஆதரவாளர்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் மணிவாசகம் (60). மாவோயிஸ்ட் இயக்க தலைவராக ெசயல்பட்டு வந்த இவர், கடந்த மாதம் 29ம் தேதி கேரளாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த 13ம் தேதி மணிவாசகத்தின் உடல் சேலத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், சிறையில் இருந்த அவரது மனைவி கலா மற்றும் சகோதரி சந்திரா ஆகியோரின் வருகைக்காக, உடனடியாக தகனம் செய்யப்படவில்லை. இதனிடையே நேற்று முன்தினம் அவர்கள் பரோலில் வந்ததால், ராமமூர்த்தி நகர் சுடுகாட்டில் மணிவாசகத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது.
 அவரது இறுதிச்சடங்கில், ஆதரவாளர்களும், கேரளாவில் இருந்து வந்த பலரும் கலந்து கொண்டு, அவருக்கு ஆதரவாக கோஷமிட்டனர். அப்போது, மணிவாசகத்தின் மனைவி கலா, “போலீசார் திட்டமிட்டு படுகொலை செய்துள்ளனர். 4 பேரின் சாவுக்கு காரணமானவர்களை பழி வாங்கியே தீருவோம்” என கணவரின் சடலுக்கு முன் நின்று சபதம் எடுத்துக்கொண்டுள்ளார்.

இதனிடையே, மணிவாசகம் உடல் சேலம் கொண்டுவரப்பட்டது முதல், நேற்று முன்தினம் தகனம் செய்யப்பட்டது வரை, அனைத்து நடவடிக்கைகளையும் போலீசாரும், கியூ பிரிவினரும் வீடியோ பதிவு செய்துள்ளனர். மேலும், அவரது உடல் வைக்கப்பட்டிருந்த சேலம் அரசு மருத்துவமனை மற்றும் ராமமூர்த்தி நகருக்கு வந்து சென்றவர்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர். மணிவாசகத்தின் மனைவி பழிவாங்கியே தீருவோம் என சபதம் எடுத்துள்ளதால், அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களின் நடவடிக்கைகளை போலீசாரும், கியூ பிரிவினரும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags : supporters ,Maoist ,revenge supporters , Wife, Maoist, Supporters, Surveillance
× RELATED நெல்லை பாஜக வேட்பாளர் நயினார்...