உசிலம்பட்டியில் பரபரப்பு அமைச்சரிடம் மனு கொடுக்க வந்து மயங்கிய பெண்

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் அரசு விழாவில் அமைச்சரிடம் மனு வழங்கிய பெண் மயங்கி விழுந்தார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் அதிமுகவின் 3 ஆண்டு சாதனைகளை விளக்கி ஜோதி ஏந்தி அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடைபயணம் நேற்று நடைபெற்றது. அப்போது உசிலம்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற இருந்தது. இதற்காக பயனாளிகள், புகார் மனு கொடுப்பவர்கள் காலை 8 மணி முதலே காத்திருந்தனர். நலத்திட்ட விழா பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயகுமார் தலைமையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.  

அப்போது உசிலம்பட்டியே சேர்ந்த சந்திரலேகா (38) மனுவை, அமைச்சர் உதயகுமாரிடம் வழங்கியபோது மயங்கி மேடையிலே விழுந்தார். உடனே அமைச்சர் மற்றும் அதிமுக பிரமுகர்கள், அதிகாரிகள் மேடையை விட்டு கீழே இறங்கி சென்று விட்டனர். அருகில் இருந்தவர்கள் சந்திரலேகாவை தூக்கி முகத்தில் தண்ணீர் தெளித்தனர். சிறிது நேரம் கழித்து கண் விழித்தவர் மீண்டும் மயங்கி சுயநினைவில்லாமல் கீழே விழுந்தார். இதையடுத்து அவரை உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Related Stories: