தமிழகத்தின் எந்த மாநகராட்சியிலும் மேயர் பதவிகளை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்: அமைச்சர் செல்லூர் ராஜூ திட்டவட்டம்

மதுரை: உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு இம்மாத கடைசியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக அரசியல் கட்சியினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோரிடம் விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது. அதிமுக சார்பில் நேற்று விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. மதுரை மாநகராட்சியில் மேயர், மற்றும் 100 வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிரும் மாநகர அதிமுகவினரிடம் விருப்ப மனுக்கள் பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு ஓட்டலில் வாங்கப்பட்டது. மனுக்களை அமைச்சர் செல்லூர் ராஜூ பெற்றுக்கொண்டார். அப்போது அதிமுகவினர், ‘‘மதுரை மாநகராட்சியை பா.ஜ.க.வுக்கு ஒதுக்க போகீறீர்களா’’ என கேட்டனர்.

அதற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘‘உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்து கட்சி மேலிடம் முடிவு எடுக்கும். மதுரையில் மாநகராட்சி மேயர் சீட்டை பா.ஜ.க. கேட்பது யூகத்தின் அடிப்படையில் உள்ளது. மதுரை மாநகராட்சியை விட்டுக்கொடுக்க மாட்டோம். ஏன் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி மேயர் பதவிக்கும் அதிமுகதான் போட்டியிடும்’’ என்று திட்டவட்டமாக பதில் அளித்தார்.

Related Stories: