×

ஏப்ரல் முதல் அமல் ரயில்களில் சாப்பாடு, டீ கட்டணம் கிடுகிடு உயர்வு

புதுடெல்லி: ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி ஆகிய ரயில்களில் ஒரு கப் டீ விலை 10 ஆக இருந்தது. இனிமேல் இரண்டாம் வகுப்பு  ஏசியில் ரூ.20ம்,ஸ்லீப்பர் கிளாசில் ரூ.15  அளவில் உயர்த்தப்படுகிறது. துரந்தோ ரயிலில் ஸ்லீப்பர் கிளாசில் மதிய சாப்பாடு, இதுவரையில் ரூ.80க்கு வழங்கப்பட்டது. இனிமேல் ரூ.120க்கு சப்ளை செய்யப்படும். மாலை நேரத்தில் வழங்கப்படும் டீ கட்டணம் 20ல் இருந்து ரூ.50 ஆக அதிகரிக்கப்படுகிறது. உணவு பொருட்களுக்கான புதிய கட்டணங்கள் அடுத்த 15 நாட்களுக்கு பிறகு முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்களில் சேர்க்கப்படும். இதன்படி புதிய கட்டண உயர்வு 120 நாட்களுக்கு பின்னர் அதாவது ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. ராஜ்தாணி ரயிலில் பஸ்ட் ஏசியில் பயணம் செய்யும் பயணி இதுவரையில் சாப்பாடுக்கு ரூ.145 கொடுத்து வந்தார். இனிமேல் ரூ.245 கொடுக்க வேண்டும்.
புதிய உணவு கட்டணங்கள் பிரிமியம் ரயில்களுக்கு மட்டுமல்ல அனைத்து ரயில்களிலும் அமல்படுத்தப்பட உள்ளது. வழக்கமான மெயில், எஸ்பிரஸ் ரயில்களில் சைவ சாப்பாடு இதுவரையில் ரூ.50க்கு வழங்கப்பட்டு வந்தது. இனிமேல் ரூ.80 ஆக கட்டணம் உயர்த்தப்படுகிறது.

பயணிகளுக்கு சைவ உணவு வகைகளையும் தரமாக வழங்க ஐஆர்சிடிசி முடிவு செய்துள்ளது. அசைவ உணவுகளான கோழி பிரியாணியில் முட்டை சேர்க்கப்பட்டு ரூ.80, ரூ.90, ரூ.110 என்ற வகையில் வழங்க இருக்கிறது. வழக்கமான ரயில்களில் கோழி கறியுடன் சாப்பாடு ரூ.130க்கு வழங்கப்படும்.
ரயில்களில் காலையில் வழங்கப்படும் டீக்கான கட்டணத்தைவிட மாலையில் வழங்கப்படும் டீ கட்டணம் அதிகமாக இருப்பது பற்றி ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், மாலை டீயுடன் வழங்கப்படும் பிஸ்கட்ஸ், நட்ஸ், ஸ்நாக்ஸ் ஸ்வீட்ஸ் ஆகியவைதான் காரணம். இந்த கட்டண உயர்வை நியாயப்படுத்திய அந்த அதிகாரி, ரயில்களில் வழங்கப்படும் உணவின் தரத்தை உயர்த்த விரும்புகிறோம். கட்டண உயர்வு கடந்த 2014ம் ஆண்டில்தான் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு தற்போதுதான் உயர்த்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : onwards , trains will be increased ,h meals and tea
× RELATED அமைச்சர் செங்கோட்டையன் தகவல் அரசு...