×

சில்லி பாயின்ட்...

* பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா லெவன் அணிகள் மோதும் 2வது பயிற்சி ஆட்டம் (2 நாள்) பெர்த் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாசில் வென்று பேட் செய்த பாகிஸ்தான் முதல் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 386 ரன் குவித்துள்ளது (90 ஓவர்). இமாம் உல் ஹக் 44, ஷான் மசூத் 76, பாபர் ஆஸம் 63 ரன் விளாசினர். கேப்டன் ஆசாத் ஷபிக் 101 ரன், காஷிப் பட்டி 56 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

* இங்கிலாந்து அணியுடனான 2வது பயிற்சி ஆட்டத்தில் (நவ. 15-17), நியூசிலாந்து ஏ அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 302 ரன் குவித்து டிக்ளேர் செய்தது (84 ஓவர்). ரூதர்போர்டு 59, கிளென் பிலிப்ஸ் 116, செய்பெர்ட் 24, கேப்டன் பிளண்டெல் 60 ரன் எடுத்தனர். முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 10 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 26 ரன் எடுத்துள்ளது.

* கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து கிறிஸ் லின், ராபின் உத்தப்பா உட்பட 11 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டேல் ஸ்டெயின், கிராண்ட்ஹோம், கிளாசன், ஸ்டாய்னிஸ், கோல்டர் நைல், ஷிம்ரோன் ஹெட்மயர், டிம் சவுத்தீ உட்பட 12 வீரர்களை விடுவித்துள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் தீபக் ஹூடா, மார்டின் கப்தில், ரிக்கி புயி, ஷாகிப் அல் ஹசன், யூசுப் பதான் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 2020 ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் டிசம்பர் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் தங்களால் விடுவிக்கப்படும் வீரர்கள் பட்டியலை அறிவித்து வருகின்றன.

* பிக் பாஷ் டி20 லீக் தொடரில் 6 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஸ்டீவன் ஸ்மித் மீண்டும் விளையாட உள்ளார். அவர் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

* இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதிய உலக கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

* இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரில் மோதவுள்ள நியூசிலாந்து அணி விவரம்: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாட் ஆஸ்டில், டாம் பிளண்டெல், டிரென்ட் போல்ட், கிராண்ட்ஹோம், லோக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம், ஹென்றி நிகோல்ஸ், ஜீத் ராவல், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தீ, ராஸ் டெய்லர், நீல் வேக்னர், பி.ஜே.வாட்லிங் (விக்கெட் கீப்பர்).

Tags : All sports
× RELATED சில்லி பாயின்ட்...