×

சையது முஷ்டாக் அலி டிராபி திரிபுராவை சுருட்டியது தமிழகம்

திருவனந்தபுரம்: சையது முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழக அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் திரிபுரா அணியை எளிதில் வீழ்த்தியது. கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த திரிபுரா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 79 ரன் எடுத்தது. அந்த அணியின் முதல் 7 வீரர்களில் 5 பேட் டக் அவுட்டாகி அணி வகுக்க, மற்ற இருவர் 4 மற்றும் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினர். அந்த அணி 7.1 ஓவரில் 9 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து திணறிய நிலையில், சவுரவ் தாஸ் - நீலாம்புஜ் தாஸ் ஜோடி 8வது விக்கெட்டுக்கு 70 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

சவுரவ் தாஸ் 44 ரன் (50 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி கடைசி பந்தில் அவுட்டானார். நீலாம்புஜ் 28 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தமிழக பந்துவீச்சில் சாய் கிஷோர் 4, நடராஜன் 3, முருகன் அஷ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய தமிழக அணி 12.1 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 80 ரன் எடுத்து அபாரமாக வென்றது. வாஷிங்டன் சுந்தர் 46 ரன் (32 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), எம்.அஷ்வின் 1 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அபராஜித் 33 ரன் (36 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), ஷாருக்கான் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். தமிழக அணி 4 புள்ளிகளை தட்டிச் சென்றது. பி பிரிவில் தமிழகம் 4 வெற்றி, 1 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது. விதர்பா (16), ராஜஸ்தான் (12), கேரளா (12), உ.பி. (12), திரிபுரா (4), மணிப்பூர் (0) அணிகள் அடுத்த இடங்களில் உள்ளன.

Tags : Syed Mushtaq Ali Trophy ,Tripura yed ,Tripura ,Mushtaq Ali Trophy , yed Mushtaq Ali Trophy ,rolled out Tripura
× RELATED கொரோனா பரிசோதனையில் அலட்சியம்:...