×

சென்னையில் பள்ளி கூடைப்பந்து நவ.20ல் தொடக்கம்

சென்னை: மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி சென்னையில் நவ. 20ம் தேதி தொடங்குகிறது. சென்னை, சோழிங்கநல்லூரில் உள்ள  எச்எல்சி இன்டர்நேஷனல் பள்ளி சார்பில் ‘ஹூப்ஸ் ஆஃப் பையர்’ என்ற பெயரில் வாலிபால் போட்டிகளை நடத்தி வருகிறது. பள்ளி மாணவர்களுக்கான இந்தப் போட்டியின் 4வது தொடர் இம்மாதம் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை  பள்ளி வளாகத்தில் நடைபெறும். கடந்த 3 தொடர்களில்  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த பள்ளி அணிகள் மட்டுமே பங்கேற்று வந்தன. இந்த 4வது தொடரில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மட்டுமின்றி  ஈரோடு, சேலம், கோவை, தூத்துக்குடி உட்பட மொத்தம் 30 அணிகள் களமிறங்க உள்ளன.

Tags : School Basketball ,Chennai School Basketball ,Chennai , School Basketball , Chennai
× RELATED சென்னையில் மக்கள் தேவையின்றி வெளியே...