ஜம்மு, லடாக் யூனியன் பிரதேசங்களுக்கான சொத்துகள், கடன்களை பிரிக்க குழு அமைத்தது மத்திய அரசு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கான சொத்துக்கள், கடன்களை பிரித்து வழங்குவதற்காக 3 உறுப்பினர்கள் அடங்கிய ஆலோசனை குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.  ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் இடைய சொத்துக்கள், கடன்களை பிரிக்க 3 நபர்கள் அடங்கிய ஆலோசனை குழுவை, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் மத்திய அரசு நேற்று அமைத்துள்ளது. பாதுகாப்புத் துறை முன்னாள் செயலாளர் சஞ்சய் மித்ரா, இக்குழுவின் தலைவராக இருப்பார். ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கிரிராஜ் பிரசாத் குப்தா ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர். இதை காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா தலைமையிலான உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் மீதமுள்ள 5 மாதங்களுக்கான நிதியை ஜம்மு காஷ்மீருக்கும், லடாக்குக்கும் 70:30 என்ற சதவீதத்தில் 14வது நிதி கமிஷன் பிரித்து வழங்கியுள்ளது.

Related Stories: