காஷ்மீரில் மனித உரிமை மீறல் அமெரிக்க எம்பிக்கள் எதிர்ப்பால் விசாரணை கமிஷன் முடங்கியது

வாஷிங்டன்: காஷ்மீர் விவகாரத்தில் தலையிட அமெரிக்க எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் மூலம், மனித உரிமை மீறல் விசாரணை கமிஷன் கிட்டத்தட்ட தோல்வியில் முடிந்துள்ளது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் பாகிஸ்தான், இவ்விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்க முயன்று தோல்வியை சந்தித்தது.

இதற்கிடையே, அமெரிக்காவின் எம்பிக்கள் அடங்கிய டாம் லாந்தோஸ் மனித உரிமைகள் விசாரணை கமிஷன், காஷ்மீர் நிலவரம் குறித்து விசாரணையை தொடங்கியது. சமீபத்தில் நடந்த இதன் முதல் கூட்டத்திலேயே அமெரிக்க எம்பிக்கள் விசாரணை கமிஷனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், மனித உரிமை விசாரணை கமிஷன் தோல்வி அடைந்து உள்ளது.

Related Stories:

>