நாட்டின் பொருளாதாரம் மிகச் சிறப்பு மக்கள் திருமணம் செய்கின்றனர் ரயில், விமானம் நிரம்பி வழிகிறது : மத்திய அமைச்சர் அங்காடி பேட்டி

புதுடெல்லி:  நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இது தொடர்பாக வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பிரச்னையை எழுப்பவும் அந்த கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்நிலையில், நாட்டின் பொருளாதாரம் குறித்து ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி, டெல்லியில் நேற்று அளித்த பேட்டி: விமான நிலையங்களும், ரயில் நிலையங்களும் நிரம்பி வழிகின்றன.

பொதுமக்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். இது நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளதையே உணர்த்துகிறது. ஆனால், சிலர் பிரதமர் நரேந்திர மோடியின் புகழை கெடுக்கும் நோக்கில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர். மூன்று ஆண்டுக்கு ஒருமுறை பொருளாதாரம் சரிவு காண்பது சுழற்சி முறையில் நடைபெறும். பிறகு பொருளாதார நிலை சீரடையும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: