உலக நாடுகளிலேயே வாகனம் ஓட்ட மிகவும் மோசமான நகரம் மும்பை

மும்பை: உலக நாடுகளிலேயே வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் மோசமான நகரம் மும்பை என்று ஐரோப்பிய அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. மும்பையில் பல லட்சம் வாகனங்கள் உள்ளன. ஆனால் சாலைகள் தரமானதாக இல்லை. இதன் காரணமாக சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. உலகில் வாகனங்கள் ஓட்டுவதற்கு மிகவும் சிறந்த நகரம் எது என்பது குறித்து ஐரோப்பாவை சேர்ந்த கார் உதிரிபாகனங்கள் விற்பனை செய்யும் கூட்டமைப்பு ஒன்று ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் உலகளவில் மொத்தம் 100 நகரங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அந்த நகரங்களில் ஆய்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட பட்டியலில் 100வது இடத்தை அதாவது கடைசி இடத்தை மும்பை நகரம் பிடித்துள்ளது. ஆய்வு பட்டியல் வருமாறு:

Advertising
Advertising

* உலகிலேயே வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் சிறந்த இடம் கனடாவில் உள்ள ஒட்டாவா நகரம் தான் மிகவும் சிறந்தது. இங்கு வாகன போக்குவரத்து நெரிசல் மிக குறைவு, விபத்துக்கள் குறைவு.

* சுவிட்சர்லாந்தில் உள்ள பெர்ன் நகர் 2வது இடத்திலும், அமெரிக்காவின் டெக்சாஸ் நகரம் மூன்றாவது இடத்திலும் உள்ளன. சாலையின் தரம், கட்டமைப்பு வசதி, பாதுகாப்பு மற்றும் செலவு ஆகிய அம்சங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு வாகனங்களை ஓட்ட சிறந்த நகரம் எது என்பது முடிவு செய்யப்படுகிறது.

*  இந்த பட்டியலில் இந்தியாவின் கொல்கத்தா 98வது இடத்தில் இருக்கிறது. மங்கோலியாவில் உள்ள உலன்பாதார் நகர் 99வது இடத்திலும், நைஜீரியாவின் லாகோஸ் 97வது இடத்திலும், பாகிஸ்தானின் கராச்சி 96வது இடத்திலும் உள்ளன.

Related Stories: