×

டெல்டா மாவட்டங்களை கஜா புயல் தாக்கி ஓராண்டாகியும் ஆறாத வடுக்கள்... தீராத துயர்கள்...விவசாயிகள் வாழ்வாதாரம் பழைய நிலைக்கு திரும்ப 10 ஆண்டுகள் ஆகும்

காவிரி டெல்டா மாவட்டத்தில் கஜா புயல் கோர தாண்டவமாடி மக்களை கலங்கடித்து சென்று ஒரு ஆண்டுகள் ஆகியும், மறையாத சுவடுகள் அதிகமாக உள்ளது. இன்று வரை மின்சாரம் சென்றடையாத பல கிராமங்கள் உள்ளது. மறுவாழ்வு கிடைக்காமல் விவசாயிகள் கடும் அவதிப்படுகிறார்கள். உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கும் நேரத்திலாவது, அரசு இதை கண்காணிக்குமா? என்று விவசாயிகள், பொதுமக்கள் ஏக்கத்துடன் உள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்கள் கடந்த 30 ஆண்டுகளாக பலவிதமான சோதனையை அனுபவித்து வருகிறது. 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி மிகப்பெரிய சுனாமி தாக்குதல் தமிழகத்தையே உலுக்கி போட்டது. அதில் நாகை மாவட்டம் தான் பெரும் பாதிப்பை சந்தித்தது. டெல்டா மாவட்ட மக்கள் மனதில் இருந்து இந்த சோக சம்பவம் நீங்குவதற்குள் கடந்த ஆண்டு 15.11.2018ல் காவிரி டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்கள் கஜா புயல் என்னும் கோர அரக்கனின் தாக்குதலுக்கு ஆளானது. கஜா புயல் என்பது வங்கக் கடலில் உருவாகிய புயல் ஆகும். இது 2018 வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்பட்ட முதலாவது புயலாகும். தமிழக கடற்கரையை கடக்கும்போது கடும் புயலாக இருந்ததால் அதிக வேகத்துடன் காற்று வீசியதோடு, கன மழையும் பெய்தது. இதன் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 63 பேர் உயிரிழந்தனர். இயற்கை வளங்கள், தோப்பு மரங்கள், விவசாயப் பயிர்கள், மக்களின் உடைமைகள் ஆகியனவற்றிற்கு பெருத்த சேதம் ஏற்பட்டது.இலங்கையால் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டிருந்த கஜா என்ற பெயர் இந்தப் புயலுக்கு சூட்டப்பட்டது.

காவிரி டெல்டா மாவட்டங்களை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி நள்ளிரவு தொடங்கி 16ம் தேதி காலை வரை புரட்டி போட்டது கஜா புயல். நாகை, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கோர தாண்டவம் ஆடிய கஜா புயல் கணக்கில் அடங்காத தென்னை மரங்கள், விசைப்படகுகள், வீடுகள் என்று எல்லாவற்றையும் அள்ளிச்சென்றது. கஜா புயல் கோர தாண்டவம் ஆடி 1 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் இன்று வரை அப்பகுதி மக்கள் மீளமுடியாத துயரத்தில் தான் இருக்கின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயல் பாதிக்கப்பட்டு ஒரு வருடம் ஆன பின்னரும் இதுவரையில் பல்வேறு கிராமங்களை இன்று வரையில் மின்சாரம் என்பது சென்றடையாமல் இருந்து வருகிறது. திருவாரூர் மாவட்டம்: திருவாரூர் மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் திருவாரூர், திருத்துறைபூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் மற்றும் மன்னார்குடி ஆகிய 5 ஒன்றியங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசு சார்பில் நிவாரண தொகை மற்றும் நிவாரண பொருட்கள் அறிவிக்கப்பட்ட போதிலும் அவைகள் பொது மக்களை சரிவர சென்றடைய வில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களில் தொடர்ந்து 6 மாத காலம் வரையில் ஈடுபட்டனர். இந்த புயல் காரணமாக மாவட்டத்தில் ஒரு லட்சத்து 27 ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் கணக்கிடப்பட்ட நிலையில் இதில் 60 சதவிகித பேர்களை கூட நிவாரணத் தொகையானது அவர்களது வங்கிக் கணக்கில் சென்றடையவில்லை. மேலும் மாவட்டத்தில் மின்சார விநியோகம் என்பதும் பல்வேறு கிராமங்களில் தற்போது வரையில் சரிவர வழங்கப்படாமல் இருந்து வருவதால் பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் மிகவும் துன்பப்பட்டு வருகின்றனர். அதன்படி திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் இருந்து வரும் அக்கரை உடையார் தெரு, நடுத்தெரு வழியாக எண்கன் வரையில் செல்லும் பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்த நிலையில் தற்போது ஒரு வருட காலம் ஆன பின்னரும் அங்கு மின்விநியோகம் என்பது இல்லாமல் இருந்து வருவதால் தெரு விளக்குகள் எரியாமல் பொது மக்கள் மட்டுமின்றி இரவு நேரங்களில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

காற்றில் பறக்கும் அரசின் அறிவிப்புகள்: இதேபோல் சாய்ந்த மரங்களை தமிழ்நாடு பேப்பர் கழகம் (டி.என்.பி.எல்) மற்றும் மரவியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பும் அறிவிப்பாகவே இருந்தது. மேலும் மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் தலைமையிலான குழு அமைக்கப்படும், ஊருக்குள் வந்த கடல் சகதி அகற்றப்படும், பாதிக்கப்பட்ட மா, பலா, தென்னை, முந்திரி உட்பட அனைத்து மரங்களும் உயர் தொழில்நுட்பத்தில் மேம்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புகளும் அறிவிப்பாகவே இருந்து வருகிறது. தஞ்சையில் சேதம்: தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 17 பேர் பலியானார்கள். 36 லட்சத்து 99 ஆயிரத்து 197 தென்னை மரங்கள்தரையோடு தரையாக சாய்ந்து போனது. இது 57ஆயிரத்து429 விவசாயிகளுக்கு சொந்தமானது. ஓட்டு வீடுகள், குடிசை வீடுகள் என மொத்தம் 1 லட்சத்து 41 ஆயிரத்து 179 வீடுகள் சேதத்திற்குள்ளானது. நெல், கரும்பு, சோளம் ஆகிய பயிர்கள் 1,678 ஹெக்டேரில் அழிவை சந்தித்தன. இது1,953 விவசாயிகளுக்கு சொந்தமானது. ஆடு, மாடு, கோழி என 1,703 கால்நடைகள் பாதிக்கப்பட்டன. 5லட்சம் மின் கம்பங்கள் சாய்ந்து போனது. மீனவர்களின் 1150படகுகளும், 1,193 படகுகளில் இன்ஜினும், 1497 வலைகளும் சேதமடைந்தது. தஞ்சை மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக இருப்பது நெல்லுக்கு அடுத்தபடியாக தென்னைதான். கஜா புயலால் இந்த மாவட்டத்தில் மட்டும் 36 லட்சத்து 99ஆயிரத்து 197 தென்னை மரங்கள் சாய்ந்ததால் ஒட்டுமொத்த தென்னை விவசாயமும் பாதிக்கப்பட்டது.

வாழ்வாதாரம் பழைய நிலைக்கு திரும்ப 10 ஆண்டுகள் ஆகும்: இதுபற்றி தமிழக விவசாயிகள் சங்க கூட்டு இயக்க மாநில துணை செயலாளர் கக்கரை சுகுமாறன் கூறியதாவது:  கஜா புயலால் தஞ்சை மாவட்ட விவசாயிகள் தான் அதிக பாதிப்புக்கு ஆளானார்கள். நிவாரணம் வழங்கும்போது மட்டும் 60சதவீத இழப்புகளை மட்டுமே கணக்கில் எடுத்து கொண்டார்கள். 100 தென்னைகள் விழுந்த ஒருவருக்கு 60 மரத்திற்கு தான் இழப்பீடு வழங்கப்பட்டது. தென்னை விவசாயிகள் பாதிப்பில் இருந்து மீண்டு வரவேண்டும் என்பதற்காக தென்னங்கன்றுகளுக்கு நடுவே ஊடுபயிராக சாகுபடி செய்ய உளுந்து விதைகள் வழங்கப்பட்டது. இந்த விதையை வாங்கி நடவு செய்த விவசாயிகள் அனைவரும் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். இதற்காக நிலத்தை உழவு செய்து பராமத்து செய்து விதை தூவிய நிலையில் சில இடங்களில் செடிகள் அமோகமாக வளர்ந்தது. ஆனால் காய்ப்பு இல்லை. பல இடங்களில் முதலுக்கு கூட தேறவில்லை. அரசாங்கமே போலி விதையை கொடுத்து விவசாயிகளை வஞ்சித்து விட்டது. அரசாங்கம் கொடுத்த தென்னங்கன்றுகள் நெட்டை ரகம் என்பதால், அது காய்ப்புக்கு வர இன்னும் 7 ஆண்டுகள் ஆகலாம். தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை விவசாயிகளின் வாழ்வாதாரம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப இன்னும் 10 ஆண்டுகள் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

காவிரி டெல்டா மாவட்டத்தில் கஜா புயல் கோர தாண்டவமாடி மக்களை கலங்கடித்து சென்று ஒரு ஆண்டுகள் ஆகியும், மறையாத சுவடுகள் அதிகமாக உள்ளது. இன்று வரை மின்சாரம் சென்றடையாத பல கிராமங்கள் உள்ளது. மறுவாழ்வு கிடைக்காமல் விவசாயிகள் கடும் அவதிப்படுகிறார்கள். உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கும் நேரத்திலாவது, அரசு இதை கண்காணிக்குமா? என்று விவசாயிகள், பொதுமக்கள் ஏக்கத்துடன் உள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்கள் கடந்த 30 ஆண்டுகளாக பலவிதமான சோதனையை அனுபவித்து வருகிறது. 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி மிகப்பெரிய சுனாமி தாக்குதல் தமிழகத்தையே உலுக்கி போட்டது. அதில் நாகை மாவட்டம் தான் பெரும் பாதிப்பை சந்தித்தது. டெல்டா மாவட்ட மக்கள் மனதில் இருந்து இந்த சோக சம்பவம் நீங்குவதற்குள் கடந்த ஆண்டு 15.11.2018ல் காவிரி டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்கள் கஜா புயல் என்னும் கோர அரக்கனின் தாக்குதலுக்கு ஆளானது. கஜா புயல் என்பது வங்கக் கடலில் உருவாகிய புயல் ஆகும். இது 2018 வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்பட்ட முதலாவது புயலாகும். தமிழக கடற்கரையை கடக்கும்போது கடும் புயலாக இருந்ததால் அதிக வேகத்துடன் காற்று வீசியதோடு, கன மழையும் பெய்தது. இதன் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 63 பேர் உயிரிழந்தனர். இயற்கை வளங்கள், தோப்பு மரங்கள், விவசாயப் பயிர்கள், மக்களின் உடைமைகள் ஆகியனவற்றிற்கு பெருத்த சேதம் ஏற்பட்டது.இலங்கையால் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டிருந்த கஜா என்ற பெயர் இந்தப் புயலுக்கு சூட்டப்பட்டது.

காவிரி டெல்டா மாவட்டங்களை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி நள்ளிரவு தொடங்கி 16ம் தேதி காலை வரை புரட்டி போட்டது கஜா புயல். நாகை, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கோர தாண்டவம் ஆடிய கஜா புயல் கணக்கில் அடங்காத தென்னை மரங்கள், விசைப்படகுகள், வீடுகள் என்று எல்லாவற்றையும் அள்ளிச்சென்றது. கஜா புயல் கோர தாண்டவம் ஆடி 1 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் இன்று வரை அப்பகுதி மக்கள் மீளமுடியாத துயரத்தில் தான் இருக்கின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயல் பாதிக்கப்பட்டு ஒரு வருடம் ஆன பின்னரும் இதுவரையில் பல்வேறு கிராமங்களை இன்று வரையில் மின்சாரம் என்பது சென்றடையாமல் இருந்து வருகிறது. திருவாரூர் மாவட்டம்: திருவாரூர் மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் திருவாரூர், திருத்துறைபூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் மற்றும் மன்னார்குடி ஆகிய 5 ஒன்றியங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசு சார்பில் நிவாரண தொகை மற்றும் நிவாரண பொருட்கள் அறிவிக்கப்பட்ட போதிலும் அவைகள் பொது மக்களை சரிவர சென்றடைய வில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களில் தொடர்ந்து 6 மாத காலம் வரையில் ஈடுபட்டனர். இந்த புயல் காரணமாக மாவட்டத்தில் ஒரு லட்சத்து 27 ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் கணக்கிடப்பட்ட நிலையில் இதில் 60 சதவிகித பேர்களை கூட நிவாரணத் தொகையானது அவர்களது வங்கிக் கணக்கில் சென்றடையவில்லை. மேலும் மாவட்டத்தில் மின்சார விநியோகம் என்பதும் பல்வேறு கிராமங்களில் தற்போது வரையில் சரிவர வழங்கப்படாமல் இருந்து வருவதால் பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் மிகவும் துன்பப்பட்டு வருகின்றனர். அதன்படி திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் இருந்து வரும் அக்கரை உடையார் தெரு, நடுத்தெரு வழியாக எண்கன் வரையில் செல்லும் பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்த நிலையில் தற்போது ஒரு வருட காலம் ஆன பின்னரும் அங்கு மின்விநியோகம் என்பது இல்லாமல் இருந்து வருவதால் தெரு விளக்குகள் எரியாமல் பொது மக்கள் மட்டுமின்றி இரவு நேரங்களில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

காற்றில் பறக்கும் அரசின் அறிவிப்புகள்: இதேபோல் சாய்ந்த மரங்களை தமிழ்நாடு பேப்பர் கழகம் (டி.என்.பி.எல்) மற்றும் மரவியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பும் அறிவிப்பாகவே இருந்தது. மேலும் மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் தலைமையிலான குழு அமைக்கப்படும், ஊருக்குள் வந்த கடல் சகதி அகற்றப்படும், பாதிக்கப்பட்ட மா, பலா, தென்னை, முந்திரி உட்பட அனைத்து மரங்களும் உயர் தொழில்நுட்பத்தில் மேம்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புகளும் அறிவிப்பாகவே இருந்து வருகிறது. தஞ்சையில் சேதம்: தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 17 பேர் பலியானார்கள். 36 லட்சத்து 99 ஆயிரத்து 197 தென்னை மரங்கள்தரையோடு தரையாக சாய்ந்து போனது. இது 57ஆயிரத்து429 விவசாயிகளுக்கு சொந்தமானது. ஓட்டு வீடுகள், குடிசை வீடுகள் என மொத்தம் 1 லட்சத்து 41 ஆயிரத்து 179 வீடுகள் சேதத்திற்குள்ளானது. நெல், கரும்பு, சோளம் ஆகிய பயிர்கள் 1,678 ஹெக்டேரில் அழிவை சந்தித்தன. இது1,953 விவசாயிகளுக்கு சொந்தமானது. ஆடு, மாடு, கோழி என 1,703 கால்நடைகள் பாதிக்கப்பட்டன. 5லட்சம் மின் கம்பங்கள் சாய்ந்து போனது. மீனவர்களின் 1150படகுகளும், 1,193 படகுகளில் இன்ஜினும், 1497 வலைகளும் சேதமடைந்தது. தஞ்சை மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக இருப்பது நெல்லுக்கு அடுத்தபடியாக தென்னைதான். கஜா புயலால் இந்த மாவட்டத்தில் மட்டும் 36 லட்சத்து 99ஆயிரத்து 197 தென்னை மரங்கள் சாய்ந்ததால் ஒட்டுமொத்த தென்னை விவசாயமும் பாதிக்கப்பட்டது.

வாழ்வாதாரம் பழைய நிலைக்கு திரும்ப 10 ஆண்டுகள் ஆகும்: இதுபற்றி தமிழக விவசாயிகள் சங்க கூட்டு இயக்க மாநில துணை செயலாளர் கக்கரை சுகுமாறன் கூறியதாவது:  கஜா புயலால் தஞ்சை மாவட்ட விவசாயிகள் தான் அதிக பாதிப்புக்கு ஆளானார்கள். நிவாரணம் வழங்கும்போது மட்டும் 60சதவீத இழப்புகளை மட்டுமே கணக்கில் எடுத்து கொண்டார்கள். 100 தென்னைகள் விழுந்த ஒருவருக்கு 60 மரத்திற்கு தான் இழப்பீடு வழங்கப்பட்டது. தென்னை விவசாயிகள் பாதிப்பில் இருந்து மீண்டு வரவேண்டும் என்பதற்காக தென்னங்கன்றுகளுக்கு நடுவே ஊடுபயிராக சாகுபடி செய்ய உளுந்து விதைகள் வழங்கப்பட்டது. இந்த விதையை வாங்கி நடவு செய்த விவசாயிகள் அனைவரும் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். இதற்காக நிலத்தை உழவு செய்து பராமத்து செய்து விதை தூவிய நிலையில் சில இடங்களில் செடிகள் அமோகமாக வளர்ந்தது. ஆனால் காய்ப்பு இல்லை. பல இடங்களில் முதலுக்கு கூட தேறவில்லை. அரசாங்கமே போலி விதையை கொடுத்து விவசாயிகளை வஞ்சித்து விட்டது. அரசாங்கம் கொடுத்த தென்னங்கன்றுகள் நெட்டை ரகம் என்பதால், அது காய்ப்புக்கு வர இன்னும் 7 ஆண்டுகள் ஆகலாம். தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை விவசாயிகளின் வாழ்வாதாரம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப இன்னும் 10 ஆண்டுகள் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

பாலைவனமான நெடுவாசல்

கஜா புயலின் கோர தாண்டவம் நெடுவாசலின் இயற்கை அழகையே சூறையாடியது. விவசாயத்தை முற்றிலும் அழித்துவிட்டது. பல தலைமுறைகளை பார்த்த நாடியம்மன் கோயில் அருகே இருந்த ஆலமரம், அரச மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டது. இந்த மரத்தடியில் தான் நெடுவாசல் மக்கள் 172 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினர். நெடுவாசலை மீட்டுக்கொடுத்த இந்த போராட்டகள மரங்கள் இன்று அடியோடு சாய்ந்து விறகாக போனது. அது மீண்டும் நடப்பட்டது. இதுபோல நெடுவாசலை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இருந்த பல ரக தென்னை மரங்களை வேரோடு சாய்த்துவிட்டது. வீட்டை சுற்றியும், காடுகளிலும் வளர்த்து வந்த 50 ஆயிரம் பலா மரங்கள், ஆயிரக்கணக்கான தேக்கு மரங்களை முறித்து எறிந்து விட்டது. நிவாரணம் கிடைக்காததால் விவசாயிகள் இன்றுவரை வேதனையில் உள்ளதாக தெரிவித்தனர்.

வரலாற்று சுவடு போல் காட்சியளிக்கும் கந்தர்வகோட்டை

கஜா புயலில் கந்தர்வகோட்டை தாலுகா பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகின. பல இடங்களில் தென்னைகள் ேவரோடு சாய்ந்தது. பஸ் ஸ்டாப், வீடுகளின் மேற்கூரை சேதமடைந்தது. இடிந்த வீடுகளை சரி செய்யக்கூட நிவாரணம் கிடைக்கவில்லை. இதனால் பலர் இடிந்த வீட்டிலே குழந்தைகளுடன் வசித்து வரும் அவலம் நீடித்து வருகிறது. இதேபோல் பெருங்களூர் நிழற்குடை சீரமைக்கப்படவில்லை. சார்பதிவாளர் அலுவலகத்தில் மனுக்கள் எழுதும் இடத்தில் பறந்த மேற்கூரை இன்னும் சீரமைக்கப்படவில்லை. அங்கு சாய்ந்த மரங்களும் அகற்றப்படாமல் கிடக்கிறது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அதிக மரங்கள் சாய்ந்தன. பெரிய அரச மரம் இன்னும் அகற்றப்படவில்லை. கந்தர்வகோட்டை எம்எல்ஏ அலுவலகத்தின் மேற்கூரை சீரமைக்கப்படாமல் உள்ளது. தாலுகா முழுவதும் இடிந்த வீடுகளும், பட்ட மரங்களும், மேற்கூரையின்றி கட்டிடங்கள் என வரலாற்று சுவடு போல் கந்தர்வகோட்டை காட்சியளிக்கிறது. கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு இலவசமாக வீடு வழங்குவதாக அறிவித்தும் அதற்கு விண்ணப்பிக்க இதுவரை மக்கள் ஆர்வம் காட்டவில்லை.

புதுமை பெறாத புதுகை: மக்கள் கண்ணீர்

கஜா புயல் கோரதாண்டவத்தில் புதுக்கோட்டை நகர், கந்தர்வகோட்டை, ஆலங்குடி, வடகாடு, நெடுவாசல், கறம்பக்குடி பகுதிகளில் கடுமையான சேதம் ஏற்பட்டது. மா, பலா, வாழை, தென்னை உள்ளிட்ட அனைத்து மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதனால் விவசாயிகள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டனர். சிலர் தற்கொலை செய்து கொண்டனர். ஓட்டு வீடுகள், கூரை வீடுகள் அனைத்தும் காற்றில் அடித்து செல்லப்பட்டது. இதபோல் பழைய கட்டிடங்கள் இடிந்தது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டன. பெரிய சேதங்களை சந்தித்த புதுகை மாவட்டம் இன்னும் புதுமை பெறாமல் உள்ளது. தென்னை, மா, பலா விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை இன்னும் கிடைக்கவில்லை. பெரும்பாலான இடங்களில் மரங்கள் இன்னும் அப்புறப்படுத்தாமல் உள்ளது. மறுவாழ்வுக்கு அரசு சரிவர உதவவில்லை என கண்ணீர் வடிகின்றனர் மக்கள். வீடு இடிந்தவர்களுக்கு பலருக்கு இன்னும் இழப்பீடு தொகை கிடைக்கவில்லை. விவசாயிகளுக்கும் முழுமையான நிவாரணம் கிடைக்கவில்லை. இதற்காக பாதிக்கப்பட்ட மக்கள் ஓயாத போராட்டம் நடத்தியும் பலனில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு ஆண்டாகியும் இடிந்த வீடுகளிலேயே குடியிருந்து வருகின்றனர். வயல்களில், தோட்டங்களில் மரங்கள் அப்புறப்படுத்தப்படாமலே கிடக்கிறது. புயல் பாதித்த பகுதிகளான நெடுவாசல் பகுதியை பார்வையிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தென்னை மரங்கள் இலவசமாக கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று தெரிவித்துவிட்டு சென்றார். ஆனால் இதுவரை தென்னை மரங்கள் வழங்கவில்லை. பல விவசாயிகள் தங்களின் சொந்த பணத்தை போட்டு மறுவாழ்வை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களும் கடனில் மூழ்கியுள்ளனர்.

Tags : districts ,Delta ,Hurricane Katrina ,Peasants ,Storm Delta ,storm , Delta Districts, Caja Storm, Farmers Livelihood
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை