உள்ளாட்சி தேர்தலுக்காக தேமுதிகவில் விருப்ப மனு வினியோகம் தொடக்கம்: அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச குழு

சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விருப்ப மனுக்களை வழங்கி தொடங்கி வைத்தார். தேமுதிக அவைத்தலைவர் வி.இளங்கோவன், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், ப.பார்த்தசாரதி, ஏ.எஸ்.அக்பர் ஆகியோர் உடனிருந்தனர். விருப்ப மனுக்களை வாங்கி சென்றவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை வருகிற 25ம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்களுக்கு ரூ.15,000, மாநகராட்சி மாமன்ற வார்டு உறுப்பினர் ரூ.4,000, நகராட்சி மன்ற தலைவர் ரூ.7000, நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ரூ.1,500, பேரூராட்சி மன்ற தலைவர் ரூ.4,000, பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ரூ.1,000, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரூ.4,000, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ரூ.2,000 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவுடன் உள்ளாட்சி அமைப்பு தொகுதி பங்கீட்டு பேச்சு குழுவை குழுவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். அந்த குழுவில் தேமுதிக துணை ெசயலாளரும், உயர்மட்ட குழு உறுப்பினருமான எல்.கே.சுதீஷ், அவைத்தலைவர் வி.இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், துணை செயலாளர்கள் ப.பார்த்தசாரதி ஏ.எஸ்.அக்பர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Related Stories: