×

இந்தியாவில் டீசல் தேவை கடந்த அக்டோபர் மாதத்தில் 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவு

டெல்லி: இந்தியாவில் டீசல் தேவை கடந்த அக்டோபர் மாதத்தில் 3 ஆண்டுகளில் இல்லாத அளவாக சரிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவு இணையதளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது. நாட்டில் டீசல் விற்பனை ஆண்டுக்கான 7.4 விழுக்காடு அளவிற்கு குறைந்து அக்டோபர் மாதத்தில் 65 லட்சத்து 10 ஆயிரம் டன்களாக சரிந்துவிட்டதாக கூறப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து 2017ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டீசல் தேவை சரிந்துவிட்டதாக பெட்ரோலிய திட்டமிடல் மற்றும்  பகுப்பாய்வு பிரிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

பொருளாதார மந்தநிலை எதிரொலியால் வாகன உற்பத்தி உள்ளிட்ட தொழிற்துறைகளில் நிலவும் தேக்கத்தின் காரணமாக நாட்டின் டீசல் விற்பனை சரிந்திருக்கிறது. மேலும் பெட்ரோல் வாகனங்களே பலரது முதன்மை தேர்வாக இருப்பதும் டீசல் நுகர்வு வீழ்ச்சிக்கு காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது. இதையடுத்து வாகன விற்பனை சரிவு, காஸ் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு தேவை அதிகரிப்பு ஆகியவை காரணமாக டீசல் நுகர்வு குறைவுக்கு காரணமாக அமைந்துவிட்டது. தற்போது டீசல் விற்பனை குறைந்திருந்தாலும் அடுத்த 6 மாதங்களில் டீசல் தேவை அதிகரிக்கும் என ஐஓசி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


Tags : India , India, diesel demand, October, 3 year, decline
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...