×

திருப்பதியில் பக்தர்களுக்கு விற்கப்படும் லட்டு விலை 50 ரூபாயாக உயர்வு: விலை உயர்வு விரைவில் அமலுக்கு வரும் எனவும் தேவஸ்தானம் தகவல்

திருமலை: திருப்பதியில் பக்தர்களுக்கு விற்கப்படும் லட்டு விலை 50 ரூபாயாக உயர்தப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினந்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்து செல்கின்றனர். இதில் சாதாரண நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், பிரமோற்சவம் போன்ற முக்கிய உற்சவ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களின் வேண்டுதலுக்கு ஏற்ப பணம், தங்க நகை, வெள்ளி பொருட்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

இதில் சாதாரண நாட்களில் ரூ2 கோடிக்கு மேலும், முக்கிய உற்சவ நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் ரூ.3 கோடிக்கு மேலும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையாக கிடைத்து வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக நாள்தோறும், சுமார் 3 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்படுகின்றன. இதில், 300 ரூபாய் டிக்கெட் தரிசனத்தில் செல்பவர்களுக்கு 2 லட்டுகள் வழங்கப்படுகிறது. இரு மலைப்பாதைகளில் இருந்து நடந்துவரும் தரிசன பக்தர்களுக்கு இலவசமகா 1 லட்டும், சலுகை விலையில் 20 ரூபாய்க்கு 2 லட்டுகளும் , 50 ரூபாய்க்கு 2 லட்டுகளும் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஒரு லட்டு தயாரிக்க ரூ. 40 செலவாகும் என்பதாலும், சில பக்தர்களுக்கு இலவச லட்டுகள் வழங்கப்படுவதாலும் திருப்பதி தேவஸ்தானத்துக்கு வருடம் தோறும் 241 .20 கோடி இழப்பு ஏற்படுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில்,  ஒருலட்டு செய்ய ரூ. 50க்கு விற்பனை செய்ய உள்ளதாகவு திருப்பதி தேவஸ்தானம்  தெரிவித்துள்ளது. திருப்பதி லட்டு விலை உயர்வு விரைவில் அமலுக்கு வரும் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 50 ரூபாய்க்கு விற்கப்படும் லட்டுகளை எத்தனை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் என்றும்,

திருப்பதியில் சாமி தரிசனம் செய்வோருக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. சலுகை விலையில் லட்டு வழங்குவதால் திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆண்டுக்கு ரூ.200 கோடி இழப்பு ஏற்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

Tags : pilgrims ,sale ,Tirupati ,Thirupathi ,devotees , Tirupati, Latu, Price Rise
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு...