ஜிஎஸ்டி ரிட்டர்ன் படிவங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு: சிபிஐசி அறிக்கை

டெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பாக தாக்கல் செய்யவேண்டிய ஆண்டு அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2017-18-ம் நிதி ஆண்டுக்கான அறிக்கையை தாக்கல் செய்ய டிசம்பர் 31-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல 2019-20-ம் நிதி ஆண்டுக்கான அறிக்கையை தாக்கல் செய்ய அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல வரி விதிப்பில் சமரச மனுக்கள் தாக்கல் செய்வதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஜிஎஸ்டி படிவத்தில் உள்ள கேள்விகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய நேரடி மற்றும் சுங்கவரி வாரியம் (சிபிஐசி) வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-18-ம் நிதி ஆண்டுக்கு தாக்கல் செய்ய வேண்டிய ஜிஎஸ்டிஆர்-9 படிவம் மற்றும் ஜிஎஸ்டிஆர்-9சி படிவம் உள்ளிட்டவற்றை டிசம்பர் 31-ம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என்றும் 2018-19-ம் நிதி ஆண்டுக்கான படிவத்தை 2020 மார்ச் மாதத்திற்குள் தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் இந்த படிவங்கள் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 30-ம் தேதியாக இருந்தது. 2018-19-ம் நிதி ஆண்டுக்கான படிவத்தை தாக்கல் செய்வதற்கான கடைசி தேசி டிசம்பர் 31- ஆக தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. காலக்கெடு நீட்டிக்கப்பட்டது தொடர்பான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி ரிட்டர்ன் படிவங்களை தாக்கல் செய்வதில் உள்ள சிரமங்களை பல்வேறு தரப்பினரும் அரசுக்கு எடுத்துக் கூறினர். இதையடுத்து கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சிபிஐசி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: