×

தொடர்ந்து விளையாடி வரும் நிலையில் எனக்கு மன அழுத்த பிரச்னை: மேலும் ஒரு ஆஸி. வீரர் விலகல்

சிட்னி: மன அழுத்தப் பிரச்னை காரணமாக, மேலும் ஒரு ஆஸ்திரேலிய வீரர், வில் புகோவ்ஸ்கி கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிளன் மேக்ஸ்வேல், சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடினார். ஆனால், அந்த தொடரில் இருந்து திடீரென விலகினார். மன அழுத்தம் காரணமாக விலகியதாகவும், சில நாட்கள் ஓய்வெடுக்க உள்ளதாகவும், அவர் கூறியதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இளம் வீரர் வில் புகோவ்ஸ்கியும் மன அழுத்தம் காரணமாக அந்த அணியில் இருந்து விலகியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில், வில் புகோவ்ஸ்கி இடம்பெற இருந்தார். இதற்கிடையில் தனக்கு மன அழுத்தப் பிரச்னை இருப்பதால் விலகியுள்ளார். ஏற்கெனவே நிக் மடின்சன், இதே பிரச்னை காரணமாக விலகியுள்ளார். இரண்டு வார காலத்தில் மூன்று வீரர்கள் மன அழுத்தப் பிரச்னை காரணமாக கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக விலகி இருப்பது கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Aussie , Stress problem, Aussie. Player, deviation
× RELATED கேம் விளையாடியதை கண்டித்ததால் பள்ளி மாணவன் தற்கொலை