செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 5 புதிய மாவட்டங்களுக்கு எஸ்.பிக்களை நியமித்தது தமிழக அரசு

சென்னை: சமீபத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு எஸ்.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக காவல்துறையில் 16 பேர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேரை தென்காசி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்களுக்கு எஸ்.பி- யாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 8-ந்தேதி விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த ஜூலை மாதம் திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்றும் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த நிலையில் சுதந்திர தின விழாவில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரிப்பதாக தெரிவித்தார். வேலூரை தலைமை இடமாக கொண்டு ஒரு மாவட்டமும், திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டமும் ராணிப்பேட்டையை தலைமை இடமாக கொண்டு மற்றொரு புதிய மாவட்டமும் தோற்றுவிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு புதிய மாவட்டங்களில் எந்தெந்த தாலுகா இடம் பெற்றுள்ளது என்ற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டது. இந்த மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது மாவட்ட கண்காணிப்பாளர் என்றும் காவல்துறை எஸ்.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக காவல்துறையில் 16 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், 5 பேர் புதிய மாவட்டங்களின் எஸ்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி,

* சென்னை பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் விஜயகுமார், திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* திருவல்லிக்கேணி துணை ஆணையர் சுகுனா சிங் தென்காசி மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* மதுரை பட்டாலியன் கமாண்டண்ட் ஜெயச்சந்திரன் கள்ளக்குறிச்சியில் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* காஞ்சிபுரம் எஸ்.பி கண்ணன் செங்கல்பட்டு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* திருச்சி துணை ஆணையர் மயில்வாகனன் ராணி பேட்டை மாவட்டத்துக்கும் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: