×

லண்டனில் நடைபெறும் ஏடிபி டென்னிஸ் போட்டி: நட்சத்திர வீரர் ஜோக்கோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ரோஜர் பெடரர்

லண்டன்: லண்டனில் நடைபெற்ற நிட்டோ ஏடிபி டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து நட்சத்திர வீரர் ஜோக்கோவிச்சை வீழ்த்தி ரோஜர் பெடரர் அரையிறுதிக்கு முன்னேறினார். லண்டனில் நடைபெற்று வரும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டிக்கு, சுவிட்சர்லாந்து நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் தகுதிபெற்றார். குரூப் பிரிவில் நடைபெற்ற கடைசி போட்டியில் உலகின் 2ஆம் நிலை வீரரான செர்பியாவின் நோவோக் ஜோகோவிச்சை ரோஜர்பெடரர் எதிர்கொண்டார். அனல் பறந்த இந்த போட்டியில் இரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் செட் ஆட்டத்தை 6 க்கு 4 என்ற புள்ளிக்கணக்கில் பெடரர் கைப்பற்றினார்.

தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய பெடரர்,  இரண்டாவது செட் ஆட்டத்தை 6-4, 6-3 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி பெடரர் அரையிறுதியில் நுழைந்துள்ளார். ஜோகோவிச்சிடம் தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வியடைந்த பெடரர், ஏடிபி போட்டியில் நேர் செட்களில் அவரை தோற்கடித்துள்ளார். நட்சத்திர வீரர்கள் மோதிய இந்த ஆட்டம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. போட்டியில் தோல்வியை தழுவியதை தொடர்ந்து, ஜோகோவிச் தொடரில் இருந்து வெளியேறினார்.


Tags : Djokovic ,Roger Federer ,semifinals , ATP Dennis, Djokovic, Roger Federer
× RELATED ‘ஜோகோவிச்தான் சிறந்த வீரர்’ - பாட் காஷ் புகழாரம்