சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நாளை மராட்டிய ஆளுநருடன் சந்திப்பு

மும்பை: சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நாளை மராட்டிய ஆளுநரை சந்திக்க உள்ளனர். மராட்டியத்தில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோர சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மராட்டியத்தில் சிவசேனாவை சேர்ந்தவரே முதல்வர் என சஞ்சய் ராவத் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

288 உறுப்பினர் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு கடந்த அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பா.ஜ 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. மற்றொரு கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 44  இடங்களையும் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் கைப்பற்றின.

பா.ஜ-சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இருந்தும் முதல்வர் பதவி பிரச்னை காரணமாக இந்த கூட்டணியால் ஆட்சி அமைக்க முடியவில்லை.

மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று மராட்டிய மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமைக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்நிலையில் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நாளை மராட்டிய ஆளுநரை சந்திக்க உள்ளனர்.

Related Stories: