அரசியல் கட்சிகள் அல்லாது, தமிழக அரசும் பேனர் வைக்கக் தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: தமிழகத்தில் பேனர் வைக்க தடைக்கோரி டிராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்லாமல் தமிழக அரசும் பேனர் வைக்க தடைகோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழகத்தில் பேனர் வைக்க தடைகோரி ட்ராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கோவையில் ரகு என்பவரும், சென்னையில் சுபஸ்ரீ என்ற பெண்ணும் பேனர் விழுந்து உயிரிழந்துள்ளனர். மேலும் ஏராளமான சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றது. இது தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் அளவிற்கு பெரும் பிரச்சனையாக உருமாறி வருகிறது. எனவே, உச்சநீதிமன்றம்  தலையிட்டு உடனடியாக தமிழகம் முழுவதும் பேனர் வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று ட்ராபிக் ராமசாமி சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும், மற்றொரு முக்கிய காரணமாக, சுபஸ்ரீ உயிரிழந்த சிறு இடைவேளைக்குள்ளாகவே சீன அதிபர் ஜின் பிங் தமிழகம் வந்தபோது தமிழக அரசு பேனர் வைக்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.

எனவே, இதுபோன்று அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு தவறான எடுத்துக்காட்டாக அமைந்துவிடும். எனவே அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மட்டுமல்லாமல் அரசுகளும் சேர்ந்து சாலைகளில் பேனர் வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கிற்கான அடிப்படை முகாந்திரம் எதுவும் இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளார். தமிழகம் முழுவதும் பேனர்களை வைக்கலாமா? கூடாதா? என்பதை அரசுகள் தான் முடிவெடுக்க வேண்டும். இது அரசுகளின் உரிமை சார்ந்த விஷயம் என்பதை அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழகத்தில் அனைவருக்கும் மிகமுக்கியமான ஒரு பிரச்சனையாக இருக்கக்கூடிய பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories: