ஐ.ஐ.டி மாணவி பாத்திமாவின் பெற்றோர் இன்று தமிழக முதல்வருடன் சந்திப்பு

சென்னை: தமிழக முதல்வர் பழனிசாமியை ஐ.ஐ.டி மாணவி பாத்திமாவின் பெற்றோர் தலைமைச் செயலகத்தில் மாலை சந்திக்க உள்ளனர். நவம்பர் 8ம் தேதி இரவு மாணவி பாத்திமா லத்தீப் சென்னை ஐ.ஐ.டி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் தனது மரணத்துக்கு காரணம் என செல்போனில் குறிப்பு எழுதிவிட்டு மாணவி தற்கொலை செய்துகொண்டார். மாணவி பாத்திமா லத்தீப்பின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்டதில் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்க பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை ஐஐடியில் எம்ஏ சமூகவியலாளர்  துறையில் முதலாம் ஆண்டு படித்து வந்த, கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த  மாணவி பாத்திமா லத்தீப் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து நேர்மையான மற்றும் சுதந்திரமான விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: