வேலூர் மாவட்டம் காட்பாடியில் மாரியம்மன் கோயிலில் 108 கிலோ ஐம்பொன் சிலை திருட்டு

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் மாரியம்மன் கோயிலில் 108 கிலோ ஐம்பொன் சிலை திருடப்பட்டுள்ளது. 4 அடி உயரம் கொண்ட மாரியம்மன் சிலையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். திருட்டுப்போன சிலையின் மதிப்பு ரூ.20 லட்சம் என்று தகவல் வெளியாகியுள்ளது. சிலை திருட்டு குறித்து கோவில் நிர்வாகி கண்ணன் அளித்த புகாரின் பேரில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பழமை வாய்ந்த மாரியம்மன் ஆலயம் உள்ளது. இதற்கு முன்பு இங்கு மாரியம்மன் சிலை கண் திறந்ததாக திடீரென பரவிய தகவலால் ஏராளமான பொதுமக்கள் ஆலயத்தில் குவிந்தனர். இந்நிலையில் கோயிலில் 108 கிலோ ஐம்பொன் சிலை திருடப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>