×

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் உள்பட 11 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து அரசாணை வெளியீடு

சென்னை : தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பதை அடுத்து மாநில தேர்தல் ஆணையத்தின் புதியச் செயலாளராக எல். சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது தொடர்பாக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் அரசாணை வெளியிட்டுள்ளார். அதில் கலை மற்றும் கலாச்சார ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் பள்ளிக்கல்வி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நில சீர்திருத்த இயக்குனர் வி.கலையரசி கலை மற்றும் கலாச்சார இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் டி.எஸ். ராஜசேகர், விடுமுறையில் இருந்து திரும்பியதை தொடர்ந்து மருத்துவப் பணிகள் தேர்வு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக உள்ள எல். சுப்பிரமணியன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் மற்றும் பேரூராட்சிகள் இயக்குனராக இருந்த எஸ். பழனிசாமி பேரூராட்சிகள் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி துணை ஆணையர் எம். கோவிந்தராவ் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஏ. அண்ணாதுரை விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டு இருக்கிறார். இதே போன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளும் திடீர் இடம் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


Tags : IAS officers ,state election commission secretary ,Tamil Nadu , IAS Officers, Transfers, Chief Secretary, K.Shanmugam, Govt
× RELATED தமிழ் ஐஏஎஸ் அதிகாரிகள் ஓரங்கட்டப்படுகிறார்கள்’