×

விவாகரத்து பெற்ற மனைவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தில் வெளியிட்ட கணவன் கைது

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் மதன் (38). தனியார் நிறுவன ஊழியர். செங்கல்பட்டை சேர்ந்தவர் சுமதி (34) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றனர். இதையடுத்து மதன், வண்ணாரப்பேட்டையில் தனியாக வசிக்கிறார். சுமதி, செங்கல்பட்டில், தனியாக டெய்லர் கடை நடத்துகிறார். இந்நிலையில், சுமதியின் மீது ஆத்திரத்தில் இருந்த மதன், அவரது புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து, இணையதளத்தில் வெளியிட்டார். மேலும், சுமதியின் செல்போன் நம்பர், முகவரி ஆகியவற்றையும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.

இதை பார்த்த சிலர், அந்த செல்போனுக்கு தொடர்பு கொண்டு, சுமதியிடம் தொல்லை கொடுத்துள்ளனர். இதையொட்டி கடந்த 12ம் தேதி, குடிபோதையில் ஒருவர், அவர் வீட்டுக்கு சென்று, தொல்லை கொடுத்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர். அவரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.
இதுகுறித்து சுமதி, செங்கல்பட்டு தாலுகா போலீசில் நேற்று புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், சுமதியின் படத்தை மார்பிங் செய்து வெளியிட்டது மதன் என தெரிந்தது. இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து, மதனை கைது செய்தனர்.

Tags : Husband arrested , posting morbid photo ,ivorced wife
× RELATED கேரள விபத்தில் பலியான துணை விமானி மனைவி கதறல் இது எனது கணவர் இல்லை