2019-20ம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5.6 % ஆகலாம் கணிப்பை குறைத்தது மூடிஸ்

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்று தனது முந்தைய கணிப்பை குறைத்துள்ள மூடிஸ் நிறுவனம், ஜிடிபி வளர்ச்சி 5.6 சதவீதமாக இருக்கும் என்று கூறியுள்ளது. முதலீட்டாளர்கள் சேவை நிறுவனமான மூடிஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, “மார்ச் 2020ல் முடியும் இந்தியாவின் 2019 நிதி ஆண்டின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 2018 நிதி ஆண்டின் 6.8 சதவீதத்தில் இருந்து குறைந்து, 5.8 சதவீதமாக இருக்கும். 2020 நிதி ஆண்டின் வளர்ச்சி 6.6 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை இருக்கக்கூடும்” என்று ஒரு மாதத்திற்கு முன்பு கணிப்பு வெளியிட்டது. அந்த கணிப்பை தற்போது மேலும் குறைத்துள்ளது. அதாவது ஜிடிபி வளர்ச்சி 5.6 சதவீதமாக இருக்கும் என்று குறைத்துள்ளது.மந்தமான பொருளாதார வளர்ச்சி நீடிப்பதால், அரசின் நிதி திரட்டும் திட்டங்களுக்கான வாய்ப்புகள் குறைந்து, கடன் சுமை அதிகரிப்பதையும் தவிர்க்க முடியாத நிலை ஏற்படும் என்று மூடிஸ் எச்சரித்துள்ளது.

அக்டோபர் மாதத்தின் துவக்கத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட நிதிக் கொள்கைக குழு கூட்ட முடிவின்படி, 2019-20 நிதி ஆண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி முந்தைய கணிப்பான 6.6 சதவீதத்தில் இருந்து 6.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. மத்திய புள்ளியியல் அலுவலகமும் டிசம்பர் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக உள்ளது என்றும் 2018-2019 நிதியாண்டின் ஜிடிபி வளர்ச்சி கணிப்பை 7.2 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகக் குறைப்பதாகவும் அறிவித்திருந்தது. சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள மந்த நிலையே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவதற்கான காரணமாக உள்ளது.  என்று நிபுணர்கள் கூறுகின்றன.

Related Stories: