டென்னிசில் இருந்து டொமினிகா ஓய்வு

பிராட்டிஸ்லாவா: டென்னிசில் இருந்து முன்னணி வீராங்கனை டொமினிகா சிபுல்கோவா ஓய்வு பெற்றார். ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீராங்கனை டொமினிகா சிபுல்கோவா. 30 வயதான இவர் சர்வதேச டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2016ம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த டாப் 8 வீராங்கனைகள் பங்கேற்ற டபிள்யூடிஏ சாம்பியன் தொடர் பைனலில் அப்போதைய நம்பர் ஒன் வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் ெகர்பரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற சிபுல்கோவா, சர்வதேச தரவரிசையில் 4வது இடத்திற்கு முன்னேறினார். டென்னிஸ் வரலாற்றில் இதுதான் அவரின் அதிகபட்ச ரேங்க் ஆகும்.

Advertising
Advertising

கடந்த 2014ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பைனல் வரை முன்னேறி, சீனாவின் லீ நாவிடம் தோல்வி அடைந்து, 2வது இடத்தை பிடித்தார். கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் லீக் சுற்றுடன் வெளியேறினார். இச்சூழலில் டொமினிகா சிபுல்கோவா சர்வதேச டென்னிசில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 

Related Stories: