×

காஷ்மீர் இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்தோம் : வைரலாகும் முஷாரப் வீடியோ

இஸ்லாமாபாத்: காஷ்மீர் இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்ததாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் கூறியுள்ள பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவில் முஷாரப் கூறுவதாவது: காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்கு வருவோருக்கு இங்கு ஹீரோக்கள் போன்று வரவேற்பு அளிக்கப்படும். நாங்கள் அவர்களுக்கு  தீவிரவாத பயிற்சி அளிப்போம். அவர்களை இந்திய ராணுவத்துக்கு எதிராக போரிடும் புனித போராளிகளாக கருதுவோம். இந்த காலக்கட்டத்தில் தான் லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புக்கள் தோன்றி” என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ கடந்த 2015ம் ஆண்டு செய்தி சேனல் நேர்க்காணல் நிகழ்ச்சியில் முஷாரப் கலந்து கொண்டு பேசியபோது எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவித்து வருவதாக இந்தியா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும்நிலையில் முஷாரப் வீடியோ வெளியாகியுள்ளது.

Tags : Musharraf ,Trained Kashmiri Youth , Trained Kashmiri youth , terrorism ,Musharraf's video is viral
× RELATED முஷாரப்புக்கு மரண தண்டனை தீர்ப்பு அளித்த நீதிபதி கொரோனாவுக்கு பலி